tamilnadu

img

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் புடைசூழ சிபிஎம் வேட்பாளர்கள் மனு தாக்கல்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் புடைசூழ சிபிஎம் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சென்னை, ஏப். 4 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி, கந்தர்வக்கோட்டை, பத்மநாபபுரம், திருவொற்றியூர், கீழ்வேளூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  இந்நிலையில், பழனி, பத்மநாப புரம், திருவொற்றியூர், கீழ்வேளூர் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர்கள், சனிக்கிழமையன்று திமுக,  காங்கிரஸ், சிபிஐ, மதிமுக, சிபிஐ உள்ளிட்ட  கூட்டணியிலுள்ள 23 கட்சி களின் தலைவர்கள் - தொண்டர்கள் புடைசூழ பேரணியாக சென்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். பழனி: என். பாண்டி திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி சனிக்கிழமை வேட்பு மனு வைத் தாக்கல் செய்தார். முன்னதாக சிஐடியு திண்டுக்கல் மாவட்டக்குழு அலுவலகத்தில் தோழர் ஏ. பால சுப்பிரமணியம் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். கட்சி யின் மாநில முன்னாள் செயலாளர் என்.வரதராஜன், திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ.தங்கராஜன், மூத்த தலை வர்கள் ஆர். ராமராஜ், வி.ஏ. கருப்ப சாமி, என். பழனிவேல் உள்ளிட்ட தலை வர்களின் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து காலை 10.30 மணிக்கு பழனி ரணகாளியம்மன் கோவில் அருகி லிருந்து கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் படை சூழ சாராட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாகச் சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ஊர்வலத்தில் அணிவகுத்த கூட்டணிக் கட்சியினரும், சிபிஎம் தோழர்களும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு சேக ரித்தனர்.  பொது மக்களும் உற்சாகமாக கையசைத்து வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ. பி. செந்தில்குமார் எம்எல்ஏ, திமுக பழனி நகரச் செயலாளர் வேலுமணி, காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம், விசிக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் போர் கொடி ஏந்தி, சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், செ. முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். சச்சி தானந்தம் எம்.பி., ஜி. ராணி, மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன் மற்றும் மாவட்ட செயற்குழு - மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். பத்மநாபபுரம் :  ஆர். செல்லசுவாமி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர் ஆர். செல்லசுவாமி, பத்மநாபபுரம் சாராட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்ன தாக அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணி வித்த வேட்பாளர் ஆர். செல்லசுவாமி ஊர்வலமாக சார்- ஆட்சியர் அலுவலகம் சென்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், ஜி. சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர். லீமாறோஸ், ராஜேந்தி ரன், வி. மாரியப்பன், தோ. வில்சன், இந்திய  ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலை வர் செல்வராஜ், மூத்த தலைவர்கள் என். முருகேசன், கே. மாதவன், மலைவிளை பாசி, திமுக தலைவர்கள் திருவட்டாறு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் புஸ்பலீலா ஆல்பன், திருவட்டாறு ஒன்றியச்  செயலாளர் ஜான் பிரைட், தக்கலை நகர்மன்றத் தலைவர் ஜி. அருள்சோபன், திருவட்டாறு வட்டாரச் செயலாளர் ஜெபா,  சிபிஐ நிர்வாகி ராஜு மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். வேட்புமனு தாக்கல் செய்த பின் பேட்டியளித்த ஆர்.செல்லசுவாமி, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று  தெரிவித்தார்.  திருவொற்றியூர்: எல். சுந்தரராஜ் சென்னை திருவொற்றியூர் தொகுதி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் வேட்பாளர் எல். சுந்தரராஜ், மாநக ராட்சி மண்டலம் 1 தேர்தல் அலுவலர் பத்ம நாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பி னர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பி னர்கள் மாதவரம் எஸ். சுதர்சனம், கே. பி.  சங்கர், மண்டலக்குழுத் தலைவர் தி. மு.  தனியரசு ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக தேரடி சன்னதி தெருவில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்தில்  சிபிஎம்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.  கண்ணன், மூத்த தலைவர்கள் அ. சவுந்தர ராசன், ப. செல்வசிங், மாவட்டச் செயலாளர் கள் எம். ராமகிருஷ்ணன், ஆர். வேல்முருகன்,  ஜி. செல்வா, திமுக மேற்கு பகுதிச் செயலா ளர் வை.ம. அருள்தாசன், மத்திய பகுதிச்  செயலாளர் ஏ.வி. ஆறுமுகம், தொகுதி பொறுப்பாளர் எஸ். மோகன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் எர்ணாவூர் நாரா யணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் மாதரம் மாகனி பாரூக், விசிக மாவட்டச்  செயலாளர் அலெக்சாண்டர், தேமுதிக  மாவட்டச் செயலாளர் எம். செந்தில்குமார்  மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கே.  ஜாபர் உசேன், என். இப்ராஹீம் காஜா, நசீர் அகமத், எல். ஜாபர் சாதிக், எஸ்.டி.  மோகன், என். ராஜேந்திரன், மாமன்ற உறுப் பினர்கள் ஆர். ஜெயராமன், சிவக்குமார், சொக்கலிங்கம், தம்பையா, சந்தோஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர். கீழ்வேளூர் : டி. லதா நாகை மாவட்டம், கீழ்வேளூர் சட்ட மன்றத் தொகுதி வேட்பாளர் டி. லதா, சனிக் கிழமை கீழ்வேளூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் த. ராஜேஸ்வரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக கீழ்வேளூர் கடைத் தெருவிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து, மாநிலக்குழு உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ, மாவட்ட செயற்குழு மற்றும்  மாவட்டக்குழு உறுப்பினர்கள், தோழமைக்  கட்சித் தலைவர்கள் தலைமையில் ஊர்வ லம் நடைபெற்றது.