அதிர்ச்சியில் அண்ணாமலை ‘தம்பிகள்’ மோகன் ஜி-யின் தத்துவப் புலம்பல்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அண்ணாமலை ஆதரவாளர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. அண்ணாமலை போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அஸ்வத்தாமன், அமர் பிரசாத் ரெட்டி போன்ற ‘அண்ணாமலை ஆர்மி’யின் முக்கியப் பெயர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை. மோகன் ஜி-யின் தத்துவப் புலம்பல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பா.ஜ.க ஆதரவாளரும் இயக்குநருமான மோகன் ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட தத்துவப் புலம்பல் வைரலாகி வருகிறது. “25 ஆண்டுகளாகச் சித்தாந்தத்திற்காக உழைத்து, பதவிகள் ஏதுமின்றி வழக்கு மட்டுமே வாங்கி, முகம் தெரியாமல் உழைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்; இளைஞர்களே அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்” என அவர் பதிவிட்டுள்ளார். தம்பிகளின் குழப்பம் இதைப் பார்த்த நெட்டிசன்கள், “லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் அண்ணாமலை தம்பிகள் ஏற்கெனவே அப்செட்டில் இருக்கிறார்கள், இதில் மோகன் ஜி-யின் இந்தப் பதிவு ‘உழைத்தால் வழக்குதான் மிஞ்சும்’ என்பதை உறுதிப்படுத்துகிறதா?” என நக்கல் செய்து வருகின்றனர். அண்ணாமலைக்கே சீட் வழங்கப்படாத நிலையில், சித்தாந்தத்தை விட சீனியாரிட்டி மற்றும் மேலிட செல்வாக்கே பா.ஜ.க-வில் எடுபடுகிறது என்பதை இந்தப் பட்டியல் உணர்த்தியுள்ளது. தம்பிகளின் “ஒப்பாரி” ஒருபுறம் இருக்க, மோகன் ஜி-யின் இந்தப் புலம்பல் சமூக வலைதளங்களில் பெரிய நகைச்சுவையாக மாறியுள்ளது.