ஊரக வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் போராட்டத்திற்கு சிபிஎம் ஆதரவு விவசாய மற்றும் ஊரக தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடையிடம் எம்.ஏ.பேபி உறுதி
புதுதில்லி ஊரக வேலைவாய்ப்பைப் பாது காக்கும் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக விவசாய மற்றும் ஊரக தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடையிடம் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக விவசாய மற்றும் ஊரக தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் என்ஆர்இஜிஏ (NRGEA) சங்கர்ஷ் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மார்ச் 2 அன்று சிபிஎம் மத்தியக்குழு அலுவல கமான ஏகேஜி பவனில் தொழிலாளர் வர்க்கத் தலைவர்கள் பி.வெங்கட், அனுராதா தல்வார், நிர்மல், விக்ரம் சிங், முரளிதரன், வினீத், தியா, சாஹில் மற்றும் அர்ஜுன் உள்ளிட்டோர் அடங்கிய உயர்மட்டக்குழு, சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபியை சந்தித்தது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் (2ஆம் கட்டம் விரை வில் துவங்க உள்ளது - ஏப்ரல் 2) ஊரக வேலை வாய்ப்பு குறித்து விரிவான விவாதத்தை மேற்கொள்வதற்காக, நாடாளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 17ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை தில்லி யில் உள்ள ‘கான்ஸ்டிட்யூஷன் கிளப் ஆப் இந்தியா’ அரங்கில் நடைபெற உள்ளது. இந்த அமர்வில் எம்.ஏ.பேபி பங்கு பெற வேண்டும் என அவரிடம் கோரிக்கை அளிக்கப் பட்டது. தொடர்ந்து, உழைக்கும் மக்களின் நலன்களுக்காக சிபிஎம் எப்போதும் பாடுபடும் என்பதை உறுதிப்படுத்திய எம்.ஏ. பேபி, வேலை செய்யும் உரிமையை மீட்டெ டுப்பதற்கான இந்த ஜனநாயகப் போராட் டத்தின் முன்னணியில் சிபிஎம் நிற்கும் என அவர் உறுதியளித்தார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கூட்டு மேடை அழைப்பு மேலும்,”உலகின் மிகப்பெரிய வேலை உறு தித் திட்டமான ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2005’ சிதைக்கப் பட்டு, அதற்குப் பதிலாக ‘விக்சித் பாரத் - வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் - கிராமின் (விபி-ஜி ராம் ஜி) சட்டம் 2025’ கொண்டு வரப்படுகிறது. தேவை சார்ந்த உரிமையாக இருந்த ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், ஒன்றிய அரசின் முழுமை யான கட்டுப்பாட்டின் கீழ் மாற்றுவது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படைத் தன்மையின் மீதான நேரடித் தாக்குதலாகும். குறிப்பாக புதிய சட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) 60 நாட்கள் கட்டாய விடுமுறை உள்ளிட்ட புதிய சட்டக் கட்டமைப்புகள் மாநிலங்கள் மற்றும் பஞ்சாயத்துகளின் தன்னாட்சி அதிகா ரத்தைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், திட்ட மிடல் மற்றும் செயல்படுத்துவதில் கிராம சபைகளை பயனற்றதாக்குகிறது. இது நல்ல தல்ல. வேலை மண்டலங்களை அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், அறுவடைக் காலங்களில் 60 நாட்கள் வேலையை நிறுத்த மாநிலங்களை அனுமதிப்பதன் மூலமும், ஒன்றிய அரசாங்கம் திட்டமிட்டு கிராமப்புற மக்களைப் பிழைப்புத் தேடி இடம்பெயரத் தூண்டுகிறது. 200 நாள் வேலை; ரூ.700 ஊதியம் கிராம சபைக்கு அதிகாரம் இதனால் பிற்போக்குத்தனமான விபி-ஜி ராம் ஜி சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; வலுப்படுத்தப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 200 நாட்கள் வேலை; ஆண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 700 வழங்கச் சட்டப்பூர்வ உத்தரவாதம்; வருகைப் பதிவு மற்றும் ஊதியப் பட்டுவாடாவில் வேலை மறுப்புக்குக் கருவியாகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைகளைத் திரும்பப் பெற வேண்டும்; கிராம சபைகளுக்கும் தனி இறையாண்மை உள்ள சூழலில், அனைத்து கிராமப்புறப் பணிகளையும் செயல்படுத்துவ தில் கிராம சபையை முதன்மையான அதிகார மிக்க அமைப்பாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உன்னிப்பாக கவனித்து, கிராமப்புறப் பொருளாதாரத்தின் மீதான இந்தத் தாக்குதலுக்கு எதிரான எதிர்ப்பைத் தீவிரப் படுத்தவும், கிராமப்புற மக்களின் கண்ணியம் மற்றும் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் அனை த்து ஜனநாயக சக்திகளுக்கும் ‘கூட்டு மேடை’ அழைப்பு விடுக்கிறது” என விவசாய மற்றும் ஊரக தொழிலாளர் சங்கங்களின் கூட்டு மேடை மற்றும் என்ஆர்இஜிஏ சங்கர்ஷ் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
