காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி
ஈரான் உயர் தலைவர் காமேனி படுகொலை செய்யப்பட்டதை மோடி அரசு கண்டிக்காமல் இருப்பது, தனது தார்மீகப் பொறுப்பிலிருந்து விலகும் செயல் ஆகும். 1994இல் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சிகள் நடந்த போது, ஐநா சபையில் இந்தியாவுக்கு ஆதரவாக ஈரான் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்பதை மோடி அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
ஒய்எஸ்ஆர்சி மூத்த தலைவர் நாகி ரெட்டி
விவசாய விளைபொருட்களுக்கு கிடைக்கும் விலையை விட, அத்தியாவசிய இடுபொருட்களின் விலை இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. நிலைமை இப்படி இருந்தால் விவசாயம் எப்படி லாபகரமாக இருக்கும்? நாட்டில் என்ன நடக்கிறது என்பதை கணிக்கக் கூட முடியவில்லை.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இறையாண்மைக்கு எதிராக அப்பட்டமான ஆக்கிரமிப்பைச் செய்யும்போது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஒஐசி) மவுனம் காப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஈரானின் உயர் தலைவரின் படுகொலை குறித்து ஒஐசி-யின் மவுனம், ஈரானின் மீது பழிசுமத்தும் முயற்சி கவலையளிப்பதாக உள்ளது.
இந்திய கத்தோலிக்க தலைவர் பூலா அந்தோணி
உலகில் ஆங்காங்கே போர்ப் பதற்றச் சூழல் நிலவி வருகிறது. உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், உலக அமைதியை வளர்ப்பதற்கும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் நல்லிணக்கச் செய்தியைப் பரப்ப வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
