states

img

ஸ்கேன் இந்தியா

வர்றாங்க..

மகாராஷ்டிராவில் “டோபி (தலையில் அணியும் ஒரு வகை குல்லா)” அணிவது பாரம்பரியப் பழக்கமாகும்.  அரசியல் கட்சிக ளின் நிகழ்ச்சிகளிலும் தொண்டர்கள் இதை அணிந்து பங்கேற் பார்கள். விவசாயிகள், தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காகப் பல முனைகளில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் பல நடைபயணங்களை நடத்தி வருகின்றன. எழுச்சியாக நடக்கும் இவற்றைக் கண்டு மிரண்டு போயுள்ள மாநில அரசாங்கம், கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்டாயத்தில் உள்ளது. ஏற்கெனவே நடந்த நடைபயணங்களிலும் டோபி அணிந்து விவசாயிகள், தொழிலாளர் கள் பங்கேற்றனர். அண்மைக் காலங்க ளில் சிவப்பு நிற டோபிகள் அதிகரித் துள்ளன. அங்க பாரு... லால் டோபிவாலே வர்றாங்க... என்று மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

நடக்குறாங்க..

“நீங்கள் ஒரு இந்து என்பதை முதலில் நிரூபி யுங்கள்” என்று உத்தரப்பிரதேச முதல மைச்சர் ஆதித்யநாத்துக்கு சாமியார் அவி முக்தேஷ்வரானந்த் சவால் விட்டுள்ளார். பசு மாட்டுக்கறி ஏற்றுமதியில் உத்தரப்பிரதேசம் முன்னணி வகிக்கிறது. பசுப்பாதுகாப்பு என்று பேசிக்கொண்டு, கறி ஏற்றுமதி செய்வது தர்மமா என்று கேட்ட அவர், 40 நாட்கள் காலக்கெடு விதித் திருந்தார். அந்தக் காலக்கெடு நிறைவு பெறுவ தால் மார்ச் 7 முதல் நடைபயணத்தைத் தொடங்கு கிறார். வாரணாசி முதல் லக்னோ வரையில் தனது ஆதரவாளர்களுடன் மக்களைச் சந்தித்தவாறு செல்கிறார். நீர் சங்கராச்சாரியார் என்று சொல்லிக் கொள்கிறீரே.. அதை நிரூபிக்க முடியுமா என்று இரண்டு மாதங்களுக்கு முன்பு, அதிகாரிகளை விட்டு கேட்க வைத்தார் ஆதித்யநாத். இப்போது இவர் எதிர்வினையாற்றுகிறார். பாஜகவினர் திணறுகின்றனர்.

ஓடுறாங்க..

மத மறுப்புத் திருமணம் செய்யவிருந்த ஜோடி ஒன்று, உயிரைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நகரில், காதலர்கள் இருவர் மணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். நடுத்தர வருமானத்தை ஈட்டும் இரண்டு குடும்பங்களும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித் தன. பல ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று மார்ச் 14 அன்று நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இருவரும் அதில் பதிவு செய்தனர். திருமணத்திற்கு முன்பாக சந்திப்பு நிகழ்வு ஒன்று பிப்ரவரி 28 அன்று நடந்தது. அந்நிகழ்வின் புகைப்படங்கள், விபரங்கள் வெளி யாகின. அப்போதிருந்தே இந்த மத மறுப்புக் காதல்  ஜோடிக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கின. திருமண நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தொண்டு நிறுவனமும் பின்வாங்கி விட்டது. காவல்துறையையும் முழு மையாக நம்ப முடியுமா என்ற சந்தேகத்தில் இந்த ஜோடி ஒளிந்து மறைந்து இருக்கிறது.

கொண்டாடுறாங்க..

பாஜக ஆளும் மாநிலங்களில் குற்றவாளி கள் சுதந்திரமாகச் சுற்றி வருவது புதிய செய்தி கிடையாது. பலரும் அதற்கா கவே கட்சியில் சேர்ந்து விடுகிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளார்கள். அங்குள்ள மோரேனா மாவட்டத்தின் காவல் நிலை யம் ஒன்றில் அதன் பொறுப்பு அதிகாரியின் பிறந்த நாளைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொண்டா டியுள்ளனர். அந்தப் பகுதியில் குற்றப் பின்ன ணியைக் கொண்டவர்கள் விழாக் கொண்டாட்டத் திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு குற்றவாளியின் தோள் மீது அமர்ந்து அதிகாரி நடனமாடியிருக் கிறார். கூட்டம் நிறைய இருந்ததால், யார், யாரெல்லாம் வந்தார்கள் என்று தெரியாது என ஒரே போடாகப் போட்டிருக்கிறார் அந்த அதிகாரி. அதோடு நிற்க வில்லை. யார் தோளில் அமர்ந்தாரோ, அவர் காவல் துறைக்கு நிறைய “உதவிகள்” செய்துள்ளாராம்.