வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வரு கிறது. இதனால் மேற்கு வான்வெளி மூடப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்க ளில் மட்டும் மத்திய வளைகுடா மற்றும் மேற்கு ஆசியா நோக்கி செல்லக் கூடிய இந்திய விமான நிறுவனங்களின் சுமார் 1,117 சர்வதேச விமானங்கள் ரத்து செய் யப்பட்டுள்ளன. 250 விமானங்கள் ரத்து 4ஆவது நாளாக செவ்வாயன்றும் இந்தியாவில் இருந்து, 250க்கும் மேற் பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தில்லி, மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய 4 விமான நிலையங்க ளில் மட்டும் இந்த ரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. இந்நிலையில், போர்ப் பதற்றம் உள்ள பகுதியான மத்திய வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் தீவிரப்படுத்தியுள்ளன. இண்டிகோ நிறுவனம் சவூதி அரேபி யாவின் ஜித்தாவிலிருந்து மும்பை, தில்லி, ஹைதராபாத் மற்றும் அகமதா பாத் நகரங்களுக்கு 10 சிறப்பு மீட்பு விமானங்களை செவ்வாயன்று இயக்கி யது. அதேபோல ஸ்பைஸ்ஜெட் நிறுவ னம் செவ்வாயன்று புஜைராவிலிருந்து (ஐக்கிய அரபு அமீரகம்) தில்லி, மும்பை மற்றும் கொச்சிக்கு சிறப்பு மீட்பு விமா னங்களை இயக்குவதாக அறிவித்துள் ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மஸ் கட்டிற்கான (ஓமன்) விமான சேவையை செவ்வாயன்று மீண்டும் தொடங்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
