states

img

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் கேஎஸ்யு குண்டர்களுக்கு ஜாமீன் மறுப்பு

கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் மீது தாக்குதல் கேஎஸ்யு குண்டர்களுக்கு ஜாமீன் மறுப்பு

பிப்., 25ஆம் தேதி அரசு நிகழ்ச்சி யில் பங்கேற்று திரும்பிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கண்ணூர் ரயில் நிலையத்தில் கேரள மாணவர் சங்க (கேஎஸ்யு) குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்டார். இந்த தாக்குதலில் கழுத்தில் படுகாயமடைந்த வீணா ஜார்ஜ் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீணா ஜார்ஜ் பெண் என்று கூட பாராமல் அவர்மீது தாக்குதல் நடத்தியதற்கு நாடு முழு வதும் கண்டனங்கள் குவிந்தன. அமைச்சர் மீது தாக்குதல் நடத்திய கேஎஸ்யு நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.   இந்நிலையில், சிறையில் உள்ள 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனு கண்ணூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வில் செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை யும் கேட்டறிந்த நீதிமன்றம், கேஎஸ்யு குண்டர்களின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது.