states

img

ஆந்திர மாநில பாஜக கூட்டணி அரசு அட்டூழியம் அமைதியாக போராடிய அங்கன்வாடி பெண் ஊழியர்கள் கைது

ஆந்திர மாநில பாஜக கூட்டணி அரசு அட்டூழியம் அமைதியாக போராடிய அங்கன்வாடி பெண் ஊழியர்கள் கைது

விஜயவாடா ஆந்திரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல மைச்சராக தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு உள்ளார். இந்நிலையில், ஆந்திர மாநிலத் தின் விஜயவாடாவில் நீண்டகால நியாயமான கோரிக்கைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் திங்க ளன்று காலை முதல் தர்ணா சவுக் பகுதியில் 30 மணிநேர அமைதிப் போராட்டத்தை தொடங்கினர். அங் கன்வாடி பெண் ஊழியர்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு திங்களன்று இரவு போராட்டக் களத்திலேயே உறங்கினர். ஆனால் செவ்வாயன்று அதிகாலை வேளை யில் பெண் ஊழியர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, காவல்துறை யினர் அவர்களை வலுக்கட்டாய மாக கைது செய்துள்ளனர். ஆண் காவலர்களை  வைத்து அட்டூழியம் ஆந்திர பாஜக கூட்டணி அரசின் இந்த அடக்குமுறைக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு இடதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. இதுதொடர்பாக ஆந்திர மாநில இடதுசாரிக் கட்சி மற்றும் அமைப்புகளின் தலைவர் கள்  வெளியிட்டுள்ள அறிக்கை யில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “விஜயவாடாவில் அங்கன்வாடி பெண் ஊழியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். ஆனால் ஆந்திர பாஜக கூட்டணி அரசின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் அவர்களை மனிதா பிமானமற்ற முறையில் கைது செய்தனர். பெண்களை கைது செய்ய ஆண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையின் போது, பெண் ஊழியர்களை ஊசிகளால் குத்தியும், கயிறுகளால் கட்டியும், முகத்தைத் துணியால் மூடியும் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றியுள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டவர்கள் தங்களின் பைகள் அல்லது தொலைபேசி களைக் கூட எடுக்க அனுமதிக்கப் படவில்லை. மாநிலத் தலைவர்க ளான பி. பேபி ராணி, கே. சுப்பா ராவ் அம்மா உட்பட சுமார் 1,000 அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விஜயவாடாவிலிருந்து சுமார் 100  கிலோமீட்டர் தொலைவில் உள்ள பல்நாடு மற்றும் ஏலூரு மாவட்டங்க ளின் தொலைதூரப் பகுதிகளு க்குக் கொண்டு செல்லப்பட்டனர். காலை 5 மணி முதல் 10 மணி வரை ஊழியர்கள் தங்களின் அடிப்ப டைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை விட்டு இறங்கவிடா மல் அடைத்து வைக்கப்பட்டுள்ள னர். காவல்துறையின் இந்த நடவ டிக்கை “ஜனநாயகமற்றது” மற்றும் “மனித உரிமை மீறல்” ஆகும். தேர்தல் வாக்குறுதிகள் மீறல் தெலுங்கு தேசம் கட்சி எதிர்க் கட்சியாக இருந்தபோது அங்கன் வாடி ஊழியர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதிய ளித்தது. ஆனால், சந்திரபாபு தலை மையிலான தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதோடு, ஒடுக்குமுறை யை ஏவி விடுகிறது. அரசின் நற் பெயருக்கு மேலும் களங்கம் ஏற் படாமல் இருக்க, உடனடியாக அங் கன்வாடி சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய உயர்வு மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான கோரிக்கைகளைத் தீர்க்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.