இந்தியாவிடம் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய்
அணுசக்தியை காரணமாகக் கூறி, ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகள் வான் வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஈரான் உயர் தலைவர் காமேனி யையும் கொன்றது. இதற்கு பதிலடி யாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறி வைத்து ஈரான் பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறும் சூழலில், அந்த கடல் பாதையை மூடுவதாக ஈரான் அறி வித்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்கக் கண்ட நாடுகளில் பெரும் கச்சா எண்ணெய் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது என ஒன்றிய அரசு தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது. கச்சா எண்ணெய், எல்பிஜி மற்றும் எல்என்ஜி ஆகியவற்றைப் பொறுத்த வரை நாம் போதுமான நிலையில் இருக் கிறோம். நம்மிடம் 25 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளது. மேலும், 25 நாட்களுக்குத் தேவையான பொருட்கள் தற்போது போக்குவரத்துப் பாதையில் உள்ளன” என்று அரசு வட்டாரம் தெரிவித்துள்ள தாக கூறப்படுகிறது.
