புல்லட் ரயில் வருமாம்!
மார்ச் முதல் நாளன்று பிரதமர் மோடி மதுரை யில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசும்போது, 2026 பட்ஜெட்டில் தமிழகம் மீது கவனம் செலுத்தப்பட்டு பெங்க ளூரு-சென்னை - ஹைதராபாத் இடையே புல்லட் ரயில் பெரு வழித்தடத் திட்டம் முன்மொழியப் பட்டுள்ளது என்பதையே பெரிய சாதனை போலச் சொன்னார். ஆனால் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் நிராகரித்தது பற்றி தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்திருக்கிறார், பாவம்!
தமிழ்நாட்டுக்கான உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளோடு ஒப்பிடும் போது 3 மடங்கு அதிகமாக உள்ளது என்று கூறினார். கடந்த 10 ஆண்டுகளிலும் அவர்தானே பிரதமர். இது அவரது ஆட்சி பற்றிய அவரது விமர் சனம் என்று எடுத்துக் கொள்ளலாம் தானே!
ஆனாலும் கூட அசராமல், மாநிலத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றும் மோடி முழங்கினார். தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கு என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம் என்று அவர் பட்டியல் போட்டிருக்கலாம். ஆனால் அப்படி ஏதும் இருந்தால் தானே!
ஏற்கெனவே, மதுரை எய்ம்ஸ் - அவரைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். கல்வியில் சாதனை படைக்க அளவில்லா நிதியை வழங்கியிருக்கிறோம் என்று கூற முடி யுமா? பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்திற்கு கையெழுத் திடாததால் வழங்க வேண்டிய நிதி வழங்கப்படாத தைத்தான் சொல்ல முடியுமா? இயற்கைப் பேரி டர்கள் பாதித்த போதெல்லாம் கேட்ட நிதியை தராமல் நிராகரித்ததைத்தான் எடுத்துக் கூறலா குமா? விவசாயிகளின் நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை செவி மடுக்காதைத்தான் செப்பலாகுமா?
மதுரை பாண்டியநாடு, வீரம் விளைந்த மண், இங்கு உருவான தலைவர்களை நினைவு கூர்கிறேன் என்று கூறியவர்க்கு மதுரை எய்ம்ஸ் பணி எப்போது முடியும் என்று கூற முடியா தது ஏன்? வளமான வரலாறு, மரபுக்குச் சொந்த மான ஆதிச்சநல்லூர் பற்றிக் குறிப்பிட்ட மோடி க்கு கீழடி தொல்லியல் மேன்மை மறந்து போன தேன்? இவையெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்பு பாஜக தலைவர் அத்வானி பற்றிக் குறிப்பிட்டதைப் போல, ‘செலக்டிவ் அம்னீ சியா’ என்று கூறலாம் தானே! இவரது ஆட்சி, தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ் மொழிக்கும் இழைக்கும் துரோகங்களை மன்னிக்கலாமா?
தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவின் நல் வளர்ச்சிக்கு முருகனிடம் வேண்டினேன் என்று கூறினார். உண்மையில் தமிழ்நாடும் இந்தியாவும் வளர, முன்னேற பாஜகவும் அதன் கூட்டாளிகளும் தமிழ கத்தில் மட்டுமல்ல, மற்ற மாநிலங்களிலும் தோற் கடிக்கப்பட வேண்டும்.
