headlines

img

சமாதானப் பேச்சு: ஒரு நாடகம்!

சமாதானப் பேச்சு: ஒரு நாடகம்!

மேற்கு ஆசியாவின் போர்ச்சூழலில், பாகிஸ் தானை மையமாக வைத்து அரங்கேற்றப்படும் “சமாதானப் பேச்சுவார்த்தை” என்பது அப்பட்ட மான ஒரு நாடகம் என்பதை தற்போதைய நிகழ்வு கள் உறுதிப்படுத்துகின்றன. ஒருபுறம் அமை திப் பேச்சுவார்த்தைக்கான களம் என இஸ்லாமா பாத் சித்தரிக்கப்பட்டாலும், மறுபுறம் ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவது இவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துகிறது.

இஸ்லாமாபாத்தில் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் எகிப்து நாடுகளின் அமைச்சர்கள் கூடிப் பேசுவது, ஈரானை ஒரு முட்டுச்சந்துக் குள் தள்ளும் அமெரிக்காவின் சூழ்ச்சிகர நகர்வே தவிர வேறல்ல. ஈரானியப் பல்கலைக்கழ கங்கள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங் கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்குப் பின்புலமாக நின்று கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பது என்பது ஒரு நயவஞ்சகமான செயல். ஈரான் தனது தற்காப்புக்காக ஏவுகணைகளை ஏவும்போது, அதை ‘பயங்கரவாதம்’ எனச் சித்தரிக்கும் அமெ ரிக்கா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீர கத்தில் உள்ள தனது ராணுவத் தளங்களைப் பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கி யன் இடையிலான விரிவான விவாதங்கள் ஒருபுறம் நடந்தாலும், களத்தில் அமெரிக்கா கூடுதல் படைகளைக் குவிப்பது ஒரு தரை வழிப் போருக்கான தயாரிப்பையே காட்டுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்கு வரத்துத் தடையை தற்காலிகமாகத் தளர்த்துவ தன் மூலம் ஈரான் ஒரு சுமூகமான சூழலை உருவாக்க முயன்றாலும், இஸ்ரேலியப் படை கள் ஈரானின் தொழில் துறை உள்கட்ட மைப்புகளைத் தகர்ப்பது இந்தப் பேச்சுவார்த்தை கள் அனைத்தும் ஒரு கண்துடைப்பு என்பதை மெய்ப்பிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க பாகிஸ்தான் முயற்சிப்பதாகக் கூறப்படுவது, உண்மையில் அமெரிக்கா தனது படைகளை இப்பகுதியில் நிலைநிறுத்துவதற்கான ஒரு தந்திரமான போர்வையே என்று ஈரான் நாடாளு மன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் எச்சரித்துள்ளது மிக முக்கியமானது.

மறுபுறம், இந்த ஒட்டுமொத்தச் சூழலும் இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கை எவ்வளவு பலவீனமாக உள்ளது என்பதை வெளிப்படுத்தி யுள்ளது. பாகிஸ்தான் ஒரு சர்வதேச மத்தியஸ்தர்  போல உருவெடுப்பதும், அமெரிக்கா அதைப் பயன் படுத்துவதும் மோடி அரசின் இராஜதந்திரத் தோல்வியாகும். அமெரிக்க விவசாய நலன்களுக் காக இந்திய விவசாயிகளைக் காட்டிக்கொ டுத்து வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்ட மோடி அரசு, தற்போது மேற்கு ஆசியப் பிரச்ச னையில் ஒரு செயலற்ற பார்வையாளராக மட்டுமே முடங்கிக் கிடக்கிறது. ஈரானுடன் ஆக்கப் பூர்வமான உறவைப் பேணத் தவறியதும், அமெ ரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதும் இந்தியா வின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும்.