headlines

img

வங்காளத்தின் ஆன்மாவும் அரசியல் சூதாட்டமும்!

வங்காளத்தின் ஆன்மாவும்  அரசியல் சூதாட்டமும்!

மேற்கு வங்கத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அம்மாநிலத்தின் பாரம்பரியமான மத நல்லிணக்கம் மற்றும் கலாச்சார அடையா ளங்கள் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ளன. ஒரு காலத்தில் வகுப்புவாத மோதல்களை ‘பூஜ்ஜிய நிலை’ காட்டிய வங்காளம், இன்று ராம நவமி ஊர்வலங்களை மையப்படுத்தி நடக்கும் அரசியல் போட்டிகளால் தத்தளிக்கிறது.

வங்காளத்தின் ஆன்மா எப்போதும் துர்க்கை வழிபாட்டிலும், எளிய விவசாயியாகப் பார்க்கப் படும் சிவன் மீதும் நிலைபெற்றிருந்தது. கிருத்தி வாஸ் ஓஜாவின் ராமாயணம் வங்காளத்தில் புகழ்பெற்றது என்றாலும், ராம நவமி வட இந்தி யாவைப் போல இங்கு ஆயுதம் ஏந்திய அச்சுறுத் தும் திருவிழாவாக இருந்ததில்லை. ஆனால், சமீப காலமாக பாஜகவால் திட்டமிட்டு இறக்கு மதி செய்யப்பட்ட வெறித்தனமான மோட்டார் சைக்கிள் பேரணிகளும், திறந்தவெளி வாள் வீச்சுகளும் வங்காளத்தின் அமைதியைக் குலைத்துள்ளன. இதற்குப் போட்டியாக ஆளும் திரிணாமுல் காங்கிரசும் பிரம்மாண்டமான ராம நவமி ஊர்வலங்களை நடத்துவது விந்தை யான முரண்பாடு.

2025-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்திற்கு எதி ரான போராட்டங்கள் முர்ஷிதாபாத்தில் வன்முறையாக மாறியபோது, மாநில நிர்வாகம் காட்டிய மெத்தனம் அதிர்ச்சியளித்தது. ஐந்து நாட்கள் நீடித்த தீவைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள், காலங்காலமாக நிலவி வந்த சமூக நல்லிணக்கத்தைச் சிதைத்தன. முதல மைச்சர் மம்தா, திகாவில் ஜகந்நாதர் கோவில் கட்டுமானப் பணிகளில் மும்முரமாக இருந்த வேளையில், பாதிக்கப்பட்ட மக்கள் அண்டை மாவட்டங்களுக்குத் தப்பியோடியது நிர்வாகத் தோல்வியின் உச்சம். இது மதச்சார்பற்ற அரசு என்பதை கேள்விக்குள்ளாக்கியது.

மதச்சார்பின்மை பேசி வந்த கட்சிகள், இன்று வாக்கு வங்கி அரசியலுக்காகத் தங்கள் அடை யாளங்களை மாற்றிக்கொள்வது ‘தப்பி ஓடும் முயலோடும் நிற்பது, வேட்டையாடும் நாயோடும் துரத்துவது’ போன்ற சந்தர்ப்ப வாத அரசியலை ளாகப் பார்ப்பதற்கும், அவரை ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றுவ தற்கும் இடையே உள்ள இடைவெளியை வங்கா ளம் இன்று உணர்ந்துள்ளது.

துளசிதாசரின் ராமசரிதம்  வட இந்தியாவில் ராம பக்தியை வளர்த்தது என்றால், கம்ப ராமாய ணமும் கிருத்திவாஸ் ராமாயணமும் தெற்கிலும் கிழக்கிலும் கலாச்சார ஒருமைப்பாட்டையே போதித்தன. ஆனால், அந்த உயரிய விழுமியங்க ளை விடுத்து, ஆயுதமேந்திய ஊர்வலங்கள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை தடுத்து நிறுத்தி  தனது தனித்துவமான நல்லி ணக்கக்  கலாச்சாரப் பெருமிதத்தைப் பேணவும் வங்காள வாக்காளர்கள் தீர்க்கமான முடிவெ டுத்து வரும் தேர்தலில் தீய சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.