tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

விசாரணைக்குத் தடை இல்லை

சென்னை, மார்ச் 3- இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் நவாஸ் கனி வருமானத்தை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வழக்கில், அவருக்கு எதிராக சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த  வழக்கின் விசாரணைக்கு எந்தத் தடையும் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிவகாசியில் அரியவகை நட்சத்திர ஆமை கண்டுபிடிப்பு

சிவகாசி, மார்ச்.3- சிவகாசி சிறுக்குளம் கண்மாய் பகுதியில் அரிய வகை நட்சத்திர ஆமை கண்டுபிடிக்கப்பட்டது. சிவகாசி பராசக்தி காலனியைச் சேர்ந்தவர் பாலமுரு கன். இவர் சிறுக்குளம் கண்மாய் பகுதியில் பிரண்டை  தண்டு பிடுங்கச் சென்றுள்ளார். அப்போது கண்மாயில் இருந்து சாலையில் ஆமை ஒன்று ஊர்ந்து வந்துள்ளது. இதையடுத்து, அதன் அருகில் சென்று பார்த்த போது, அரியவகை உயிரினமான நட்சத்திர ஆமை என்பது தெரியவந்தது. எனவே, அதை பாதுகாப்பாக பிடித்த பால முருகன், சிவகாசி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத் தார். அதனைத் தொடர்ந்து போலீசார், நட்சத்திர ஆமையை  வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

மதுப்பாட்டில்கள் வைத்திருந்தவர் கைது

தேனி, மார்ச் 3- தேனி அருகே மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி மதுவிலக்கு காவல்துறையினர், தேவதானப் பட்டி அருகிலுள்ள சில்வார்பட்டி பேருந்து நிலையப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (76) மதுப்  பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டி ருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கந்த சாமியை கைது செய்து, அவரிடமிருந்து 26 மதுப்பாட்டில்  களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தீப்பற்றி பெண் உயிரிழப்பு

தேனி, மார்ச் 3- ஆண்டிபட்டி அருகே உடையில் தீப்பிடித்ததில் பெண்  ஒருவர் உயிரிழந்தார். ஆண்டிபட்டி அருகிலுள்ள ராஜதானி ஒக்கரைப்பட்டி யைச் சேர்ந்த முருகன் மனைவி மீனா (46) சமையல் செய்த போது உடையில் தீப்பிடித்து தீக்காயம் அடைந்தார். அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி, மார்ச் 3- ஆண்டிபட்டி அருகே பெண் ஒருவர் தூக்கிட்டு தற்  கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த லெனின் மனைவி மகேஸ்வரி (30) வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக  கூறப்படுகிறது. வலி அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மகேஸ்வரி திங்கள் கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய தார்ச்சாலை வசதி கேட்டு நத்தத்தில் சாலை மறியல்

நத்தம், மார்ச் 3- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி ஊரா ட்சிக்கு உட்பட்ட ஒடுகம்பட்டி கிராம மக்கள், புதிய தார்  சாலை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒடுகம்பட்டியில் இருந்து வெள்ளிமலைக்கு செல்லும்  சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருப்ப தாகவும், இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், செவ்  வாயன்று புதிய தார்சாலை உடனடியாக அமைக்க வலி யுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நத்தம்  போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மலைச்சாமி உள்ளிட்ட போலீசார், மறிய லில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி னர். இதில், 10 நாட்களுக்குள் சாலை அமைப்பதற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை யடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

புதுமண்டப கல் தூண் சீரமைப்பிற்கு செப்டம்பர் வரை அவகாசம்

மதுரை, மார்ச் 3- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபத்தில் உள்ள பழமையான கல் தூண்  களை சீரமைக்கும் பணிகளை முடிக்க செப்டம்பர் மாதம் வரை அவகாசம் வழங்கி  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுமாகாளிப்பட்டியைச் சேர்ந்த மணி பாரதி தாக்கல் செய்த மனுவில், கோவிலின்  புதுமண்டபத்தை அதன் தொன்மையை பாதிக்காமல் புனரமைத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என  கோரியிருந்தார். முன்னதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில், புனரமைப்பு பணிகளை நிறைவு செய்ய பிப்ரவரி 28ஆம் தேதி வரை  அவகாசம் கோரப்பட்டிருந்தது. நீதிமன்றம்  அதனை ஏற்று, மார்ச் முதல் வாரத்தில் நிலை  அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டி ருந்தது. இந்நிலையில், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புது மண்டப சீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய மேலும் கால அவகாசம் கோரி கோவில் நிர்வாகம் மனு தாக்கல் செய்தது. அதில், கோவிலில் செப்டம்பர் மாதத்  தில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள் ளதாகவும், புதுமண்டப கல் தூண்கள் மிகப் பழமையானவை என்பதால் பாதுகாப்பு டன் சீரமைக்க கூடுதல் கால அவகாசம்  தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட் டது. இதனை பரிசீலித்த நீதிபதிகள், சீர மைப்பு பணிகளை செப்டம்பர் மாதத்திற் குள் முடிக்க அவகாசம் வழங்கி உத்தர விட்டனர்.