ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசம்!
பல்வேறு ஊழல் அல்லது முறைகேடுகளில் சிக்கியவர்களின் குடுமி பாஜக-விடம் இருக்கும் பொழுது, அவர்கள் ராஜாவை விடச் சிறந்த ராஜவிசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். அப்படி ஓர் அதீத ராஜவிசுவாசத்தைத் திருவாளர் டி.டி.வி. தினகரன் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஞாயிறன்று மதுரையில் நடந்த என் டி ஏ பொ துக்கூட்டத்தில் பேசிய மேற்படி தினகரன், “களப்பிரர்க ளின் இருண்ட ஆட்சியிலிருந்து மீட்ட கடுங்கோன் பாண்டியன் போல, திமுக-வின் இருண்ட ஆட்சியிலி ருந்து தமிழகத்தை மீட்க வந்தவர் மோடி” எனக் கூறினார்.
அவருக்குத் தளபதிகளாகத் தானும் எடப்பாடி பழனிசாமியும் உள்ளதாகவும் அவர் கூறிக்கொண்டார். எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்ப்பதைவிடத் தூக்கில் தொங்கிவிடுவேன் எனப் பேசிய தினகரன், இப்போது அந்தர் பல்டி அடித்துப் பேசுகிறார். இவர்களின் குடுமி பாஜக-வின் கையில் இருக்கும் பொழுது வேறு எப்படிப் பேச இயலும்? எனினும் களப்பிரர்களின் ஆட்சியை இருண்ட ஆட்சி எனக் குறிப்பிடுவது இவருக்கு வரலாறு தெரியவில்லை என்பதை அப்பட்டமாக அம்பலப்படுத்தி விட்டது. மேலும், தமிழ்நாடு குறித்த மோடியின் அக்கறை யின்மையைத் திட்டமிட்டே தினகரன் போன்ற கூட்டாளிகள் இதன் மூலம் மறைக்க முயல்கின்றனர் என்பதே உண்மை.
மோடியின் அக்கறையின்மை: விடைதெரியா கேள்விகள் மதுரைக்கே கூட மோடி அரசின் அக்கறையின்மை எவ்வளவு குரூரமானது என்பதை மக்கள் அறிவர். பல ஆண்டுகள் கடந்தும் மதுரை எய்ம்ஸ் ஏன் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை? மதுரைக்கு ஏன் மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டது? மதுரை விமான நிலையம் அத்துணை தகுதிகள் இருந்தும் ஏன் சர்வதேச தரத்திற்கு அங்கீகரிக்கப்படவில்லை? மதுரைக்கும் அதற்கு அப்பால் உள்ள தென் பகுதிக ளுக்கும் ஏன் ஒரு மத்திய பொதுத்துறை ஆலை கூட மோடி அரசால் இதுவரை தொடங்கப்படவில்லை? ஏன் சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்பட்டது? ஏன் கீழடியும் ஏனைய தொல்லியல் ஆய்வுகளும் திட்ட மிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றன? திருப்ப ரங்குன்றம் பிரச்சனையை முன்வைத்து ஏன் மத மோ தல்கள் முன்னெடுக்கப்படுகின்றன? திண்டுக்கல்லில் ஏன் அபிராமி அம்மன் சிலையை முன்வைத்து மத மோதல்கள் திட்டமிடப்படுகின்றன? இப்படிப் பல கேள்விகள் பதில் தெரியாமல் உள்ளன.
மேலும், கோவைக்கு ஏன் மெட்ரோ நிராகரிக்கப் ட்டது? அன்னூரில் வர வேண்டிய செமிகண்டக்டர் ஆலை ஏன் குஜராத்திற்கு மடைமாற்றப்பட்டது? இந்தித் திணிப்பை மறுத்தால் ஏன் கல்வி நிதி மறுக்கப்படுகிறது? தமிழ்நாட்டிலிருந்து பெறும் வரிகளுக்கும் தரப்படும் நிதி ஒதுக்கீடுக்கும் ஏன் அதீத இடைவெளி? நிதி ஆணையம் ஏன் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டைக் குறைக்க வேண்டும்? தமிழ்நாட்டில் 170-க்கும் அதிகமான இஸ்லாமிய மற்றும் கிறித்தவ வழிபாட்டுத் தலங்கள் கைப் பற்றப்பட வேண்டும் என ஏன் சங் பரிவாரத்தினர் பட்டி யலிடுகின்றனர்? இப்படி மோடியின் அக்கறை யின்மைக்கும் சங் பரிவாரத்தினரின் மோசமான நடவடிக்கைகளுக்கும் ஏராளமான உதாரணங்கள் இருந்தும், மோடியைக் கடுங்கோன் பாண்டியனுடன் ஒப்பிட்டுப் பேசுவது என்பது ராஜாவைவிடச் சிறந்த ராஜவிசுவாசமின்றி வேறு என்ன? களப்பிரர்கள் ஆட்சி இருண்ட காலமா? வரலாற்று உண்மை என்ன? களப்பிரர்கள் ஆட்சி இருண்ட காலம் எனச் சொல்வ தன் மூலம் தனது வரலாற்று அறியாமையைத் தினகரன் வெளிப்படுத்தியுள்ளார்.
களப்பிரர்கள் நேர்மையான போர் முறைகளைக் கடைப்பிடிக்காமல் கொரில்லா முறை மூலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைத் தோற்கடித்தனர் எனத் தினகரன் குற்றம் சாட்டுகிறார். மண்ணுக்கும் பொன்னுக்கும் நடந்த போர்களில் மன்னர்கள் எழுதப்படாத தார்மீக நெறிகளைக் கடைப்பிடித்ததைவிட அவற்றை புறக் கணித்த உதாரணங்கள் தான் மிக அதிகம். எந்தச் சாம்ராஜ்யமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கொரில்லா போர்முறை அல்லது மறைந்திருந்து தாக்கும் போர் முறை தடைவிதிக்கப்பட்ட ஒன்று அல்ல. சிறந்த போர் முறைகளும் அர்ப்பணிப்பு மிக்க வீரர்களும் இல்லாமல் வீரமிக்க சேர, சோழ, பாண்டிய மன்னர்களை வீழ்த்தி சுமார் 300 ஆண்டுகளுக்கும் அதிகமாகத் தமிழ் மண்ணில் ஆட்சி புரிந்தது களப்பிரர்களுக்கு எளிதல்ல! களப்பிரர்கள் ஆட்சி குறித்து ஏன் பரவலாகத் தரவுகள் இல்லை? களப்பிரர்கள் வருவதற்கு முன்பே தமிழ் மண்ணில் சமணத்திற்கும் பிராமணியத்திற்கும் முரண்பாடுகள் உச்சத்தில் இருந்தன.
‘தென்னிந்திய சமணம் குறித்த ஆய்வுகள்’ (Studies in South Indian Jainism) எனும் நூலில் ஆய்வாளர்கள் எம்.எஸ். ராமசாமி அய்யங்காரும் சேஷகிரி ராவும் குறிப்பிடு வது போல, கி.பி. மூன்றாவது மற்றும் நான்காவது நூற்றாண்டுகளில் பிராமணிய மற்றும் ஏனைய இந்து ஆவணங்கள், சமண சமயம் என்ற ஒன்று இருந்தது என்பதையே புறக்கணித்தன. நான்காவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில் பிராமணியம் மிகவும் வன்மமான அணுகுமுறையைச் சமண சமயத்திற்கு எதிராக வெளிப்படுத்தியது. இந்த முரண்பாடுகள் எந்த அளவுக்கு இருந்தன எனில், சமண சமயத்தைச் சார்ந்த வஜ்ர நந்தி என்பவரின் பெரு முயற்சியால் தனியாக ஒரு “திராவிட சங்கத்தை” உருவாக்கும் அளவுக்கு இருந்தது. களப்பிரர்கள் வலுவாகச் சமணத்தை முன்னெ டுத்தனர்; பௌத்தம் மற்றும் ஆசீவகத்தையும் ஆதரித்தனர். அதே சமயம் சைவ, வைணவப் பிரி வினருக்கு எதிராகச் சில நடவடிக்கைகளையும் எடுத்தனர்.
குறிப்பாகப் பிராமணர்களுக்கு “பிரம்மதே யம்” எனும் பெயரில் தரப்பட்ட நிலக்கொடைகளைப் பறித்து அரசுச் சொத்துக்களாக மாற்றினர். இத்த கைய செயல்கள் காரணமாகவே பின்னாட்களில் மீண்டும் புத்துயிர் பெற்ற சைவமும் வைணவமும் அவர்களை ஆதரித்த மன்னர்களும் களப்பிரர்களின் ஆட்சி குறித்த தரவுகளை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்தனர். இலக்கியமும் பொருளாதாரமும் செழித்த காலம் களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம் மகத்தான வளர்ச்சி பெற்றது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முதுமொழிக் காஞ்சி, ஆசாரக்கோவை ஆகிய பதினோரு நீதி நூல்களும், கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம் பது, கைந்நிலை ஆகிய ஆறு அகப்பொருள் நூல்களும், களவழி நாற்பது என்ற ஒரு புறப்பொருள் நூலும் களப்பிரர் காலத்தில் தோன்றியவை எனக் கருதப்படுகிறது. மேலும் களப்பிரர்கள் காலத்தில் நீர் நிலைகளைப் பாதுகாக்க நவீன முயற்சிகள் எடுக்கப்பட்டதாகவும், பூமிக்கடியில் மழை நீரைச் சேகரிக்கும் முறைகளை உருவாக்கினர் எனவும், இயற்கையை மதிக்கத்தக்க நடைமுறைகள் உருவாக்கப்பட்டன எனவும், அரிக்க மேடு துறைமுகம் வழியாகப் பரவலான வர்த்தகம் நடந்தது எனவும் ஆய்விதழ்கள் குறிப்பிடுகின்றன.
நவீன தொழில்நுட்பங்கள் உருவானதும் இலக்கி யங்கள் வளர்ச்சி பெற்ற காலத்தையும் எப்படி இருண்ட காலம் என அழைக்க முடியும்? அது இருண்ட காலம் அல்ல; சைவத்தையும் வைணவத்தையும் எதிர்த்த காரணத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம்! எனவே இப்போதும் தமிழ்நாடு இருண்ட காலத்திலும் இல்லை; மோடி தமிழ்நாட்டை மீட்க வந்த கடுங்கோன் பாண்டியனும் இல்லை. நடக்கப் போகும் சட்டமன்றத் தேர்தல்கள் மதவாதத்திற்கும் மதச்சார்பின்மைக்கும் இடையே நடக்கும் போர். தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக நடக்கும் போர். மோடியையும் அவரது ராஜவிசுவாசிகளையும் தோற்கடிக்கும் போர்.
