tamilnadu

குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஐஸ் பிளாண்ட் அமைப்பதா? 7 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

குடியிருப்புகள், கல்வி நிலையங்கள் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் ஐஸ் பிளாண்ட் அமைப்பதா? 7 கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மயிலாடுதுறை, டிச.10 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே குடியிருப்புகள்-கல்வி நிலையங்கள்  - விடுதிகள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ஐஸ் பிளாண்ட்டை   அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுத்தும் ‘தேவகுபி’ ஐஸ் பிளாண்ட் அமைத்திட ஒப்புதல் வழங்கிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளரை கண்டித்தும் பாதிப்புக்குள்ளாகும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் புதன் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட கேசவன்பாளையம், சமயன்தெரு, அரிசிக்காரப்பாளையம், ஆரன்பாளையம், சாத்தங்குடி மேலத்தெரு, புதுப்பாளையம், வெளிப்பாளையம் ஆகிய 7 கிராமங்களிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  போதிய அடிப்படை வசதிகள் இன்றியும், கடல்நீர் உட்புகும் பகுதியாகவும், மழைக்காலங்களில் வெள்ளநீர் வடியாத பகுதிகளாகவும் இக்கிராமங்கள் உள்ளன. நிலத்தடி நீர் முற்றிலும் உப்பு தன்மையாக இருப்பதால் அன்றாட தேவைக்கான நீர் சவாலாகவே உள்ளது. இப்பகுதியில் வடி கால் கட்டமைப்பு வசதியும் கேள்விக்குறி யாகவே இருப்பதால் கடும் சிரமத்திலேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.  இந்நிலையில், அந்த கிராமங்களுக்கு மத்தியில் பொதுமக்களிடம் எந்தவித கருத் தையும் கேட்காமல், நேரடி ஆய்வையும் மேற் கொள்ளாமல், மிகப்பெரும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாக ‘தேவகுபி’ என்ற பெயரில் ஐஸ் பிளாண்ட் அமைத்திட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அனு மதியளித்து பிளாண்ட் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ஐஸ் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பொறி யாளர் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி 300-க்கும் மேற்பட்ட மக்கள் கேச வன்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பந்தல் அமைத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் தலைமை யில் நடந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச் சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர் வேலு குணவேந்தன்,  நிர்வாகிகள், தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள், பகுஜன் சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். குடியிருப்புகள், கல்வி நிலையங்கள், மாற்றுத் திறனாளிகள் விடுதி ஆகியவை மத்தியில் கட்டப்படும் ஐஸ் பிளாண்ட்டை உட னடியாக தடுத்து, அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.