tamilnadu

img

‘இன்னுமா எங்களை நம்புறீங்க?’ - அ.வ.பெல்லார்மின்

‘இன்னுமா எங்களை நம்புறீங்க?’ 

பீகாரில் திருடப்பட்ட வெற்றியின் கொண்டாட்ட கூச்சல்களுக்கிடையே, நவம்பர் 21-இல் நான்கு தொழி லாளர் சட்டத் தொகுப்புகளை நடைமுறைப் படுத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டது மோடி அரசு. இழவு வீட்டு ஒப்பாரியின் நடுவில் பந்தலில் பாகற்காயை கண் வைத்ததைப் போல், நேரம் பார்த்துத் தன் கார்ப்பரேட் நண்பர்களுக்கு விருந்து படைத்தார் மோடி. கோடி மீடியாக்களும், யூடியூபர்களும் அதிசயம் நிகழ்ந்து விட்டதாகவும், இந்தியத் தொழிலாளர்கள் அனைவரும் இனி தொட்டிலில் கிடந்து சுகமாக ஆடப் போகிறார்கள் என்றும் அவிழ்த்து விட்டனர். பணி ஆணை, ஓராண்டில் கிராஜூவிட்டி, ஊதிய நிர்ணயம், முறை சாரா தொழிலாளர்களுக்குச் சிறப்பு கவனம் என  பாஜகவின் ஊதுகுழல்கள் விளக்கிய விளக்கத்தில் காதுகளில் இரத்தமே கசிந்து விட்டது. 

இது ஒரு பெரும் மோசடி. தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் இழந்து ஏதுமற்றவர்களாக நிற்கப் போகிறார்கள் என்ற உண்மையை விளக்கிய சிஐடியு மற்றும் தொழிற்சங்க நடுநிலையாளர்களின் கருத்துக்களுக்கு, தங்களுக்கே உரிய அநாகரிக மொழியில் பதிவிட்டுக் கொண்டிருந்த சனாதன தம்பிகளைப் பார்த்தபோது பரிதாபப்படுவதா? பரிவேகம் கொள்வதா? எனப் புரியவில்லை. மரணத்தைத் தெரிந்து கொள்ளாமல் விளக்கின் ஒளியைச் சுற்றிப் பறக்கும் ஈசல்களாக, நுனி  கிளையில் இருந்து கொண்டு, அடி மரத்தை வெட்டும் அதிபுத்திசாலிகளான அவர்களுக்கு, மோடி அரசின் கடந்தகாலப் பெரும் மோசடிகளை நினைவூட்ட வேண்டியது அவசியம்.

1. கருப்புப் பணம் ஒழிப்பு எனும் கபட நாடகம் (2016)  2016 நவம்பர் 8-இல் இதே கபட முக பாவனைகளோடும், நடிக்கும் விரல்களோடும் நள்ளிரவில் தொலைக்காட்சி திரைகளில் தோன்றி, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோடி. கருப்புப்  பணம் ஒழிந்து விடும் என்றும், ஆறு மாதங் களில் பொற்காலத்திற்கு அழைத்துச் செல்வ தாகவும் கூறினார். உழைத்துச் சம்பாதித்த வெள்ளைப் பணத்தை எடுக்க முடியாமல், நோய்க்கு மருந்து வாங்க முடியாமல், வங்கிகளுக்கு முன்னால் வரிசையில் நின்று சுருண்டு விழுந்து செத்தவர்கள் நூற்றுக்கும் மேல். இதில் 80% இந்து  மக்கள். எந்த அலைச்ச லும் இல்லாமல் அதானி, அம்பானி இந்துக்களுக்கு மட்டும் சுடச்சுட புதிய  ரூபாய் நோட்டுகள் மூடை மூடையாகக் கிடைத்துக் கொண்டிருந்தது இன்னொரு சாதனை. இறுதி யில், 99.6% நோட்டுகளும் வெள்ளையாகத் திருப்பி வந்துவிட்டன என்று மத்திய நிதித்துறை கூறியது. தீவிரவாதம் ஒழியாத லட்சணம், புல்வாமா (2019), தில்லி (2025) போன்ற பல தாக்குதல்களால் நிரூபணமானது.

2. ஜி.எஸ்.டி எனும் வரிக்கொள்ளை (2017)  2017 ஜூலை 1-இல் ஜி.எஸ்.டி எனும் அற்புதத்தை நிகழ்த்துகிறோம், ஒரே நாடு, ஒரே வரி என்றார் மோடி. இட்லிக்கு வரி, சட்னிக்கு வரி, சுடுகாட்டுக்கும் வரி என இந்தியப் பாமரர்களின் (80% இந்துக்கள்) கோவணங்கள் வரை உருவிய வரிக் கொள்ளை இது. ஒவ்வொரு நிதி காலாண்டி லும் லட்சம் லட்சம் கோடிகளாக வரி வசூல் குவிய,  கார்ப்பரேட்டுகளின் கடன்கள் எல்லாம் தள்ளு படி செய்யப்பட்டன. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள், வியாபாரம் அனைத்துக்கும் மூடு  விழா நடத்தி, அவற்றில் வயிறு பிழைத்த கோடிக் கணக்கான தொழிலாளர்களைத் தரித்திரர் களாய் வீதியில் நிறுத்தினார் விஷ்வகுரு. வேக மாகச் சரியும் பொருளாதாரம், எகிறிப் பாயும்  வேலையின்மை காரணங்களால் நிர்பந்தப் படுத்தப்பட்டு, ஜி.எஸ்.டி விகிதங்களில் சில தளர்வு களைச் செய்த போதும், அதையும் சாதனை என்று இதே மீடியாக்கள் கொண்டாடின. 

3. விவசாயத்தை பலியிட வந்த வேளாண் சட்டங்கள் (2020)  2020 செப்டம்பர் 17-இல், இந்தியாவின் மொத்த விவசாயத்தையும் அதானி, அம்பானி இந்துக்களுக்குத் தாரை வார்ப்பதற்காக மூன்று வேளாண் சட்டங்களை மோடி கொண்டு வந்தார். நல்ல வேளையாக, தாய் திருநாட்டின் வேளாண் பெருமக்கள் மோடியைப் புரிந்து  கொண்டார்கள். எதிர்த்து வீரச் சமர் புரிந்தார் கள். 670 பேர் இன்னுயிரை ஈந்து விவசாயத்தை காத்து நின்றார்கள். உயிர்த் தியாகம் செய்த வர்களில் 80% இந்து மதத்தைப் பின்பற்றும் விவ சாயிகள். எதிர் வந்த தேர்தல்களில் சேதம் வரும் எனக் கருதியதால், கார்ப்பரேட்டுகளுக்கான இந்தச் சட்டங்களை அரசு திரும்பப் பெற்றது. 

4. தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டும் சட்டத்தொகுப்புகள் (2025)  2025 நவம்பர் 21-இல், அடிமைச் சமூக காலம் முதலே போராடிப் பெற்ற 29 தொழி லாளர் நலன் காக்கும் சட்டங்களைத் தகர்த்தெறிந்து, முதலாளிகளின் அடிமை களாகச் சாசனப்படுத்தும் நான்கு சட்டக் கூறுகளை மோடி அறிவிக்கிறார். கர்ணனின் கவச குண்டலங்களைப் போலத் தொழிலாளர் களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் சங்கம் சேரும் உரிமை, கூட்டுப் பேர உரிமை ஆகிய கவ சங்களை அகற்றி, அவர்களை நிராயுதபாணி களாக்கி, கார்ப்பரேட்டுகளுக்குப் பலியிடுவது தான் இந்தச் சட்டத் தொகுப்புகளின் சாராம்சம். 

வங்கிக் கணக்கில் ₹15 லட்சம், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, ஆதார விலை என மோடி ஏற்கெனவே பசப்பிய ‘இத்யாதிகள்’ போலவே, இந்தச் சட்டங்களும் ‘சர்க்கரை’ என எழுதிச் சுவைப்பது போலத்தான். இந்தியாவின் கார்ப்பரேட் குழுமங்களும், பெரு முதலாளிகளின் கூட்டமைப்புகளும் வாய் பிளந்து வரவேற்கும் மகிழ்ச்சியைப் பார்த்தால்,  இந்தச் சட்டங்கள் யாருக்கானது என்பது புரியும். ஆனால், மதத்தை சொல்லி, சாதியை சொல்லி  சமூகத்தைப் பிளவுபடுத்தி, கார்ப்பரேட்டு களுக்குச் சேவகம் செய்யும் இந்தத் தம்பிகளைப் பார்த்து மோடியே கேட்பார்: “இன்னுமா  எங்களை நம்புறீங்க?”