ஆந்திராவில் அங்கன்வாடி ஊழியர்கள் மீது போலீஸ் தாக்குதல்
விஜயவாடா/புதுதில்லி ஆந்திரப் பிரதேசத்தில் நியா யமான கோரிக்கைகளுக் காக அமைதி வழியில் போ ராடி வரும் அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர்கள் மீது, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு ஏவி விட்டுள்ள கொடூரமான போலீஸ் தாக்குதலை அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) வன்மையாகக் கண்டித் துள்ளது. நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம் விஜயவாடாவில் உள்ள ‘தர்ணா சௌக்’ பகுதியில் மார்ச் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் ‘மகா தர்ணா’ போ ராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி மற்றும் ஐஎப்டியு ஆகிய சங்கங் களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. சுமார் 15,000 ஊழி யர்கள் பங்கேற்ற இந்தப் போராட் டம், மார்ச் 2 இரவு முழுவதும் அமை தியான முறையில் தொடர்ந்தது. இந்நிலையில், மார்ச் 3 செவ் வாய் அதிகாலை 4 மணியளவில், தூங்கிக் கொண்டிருந்த பெண் ஊழியர்கள் மீது ஆந்திரப் போலீ சார் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தாக்குதல் நடத்தினர். போராட்டப் பந்தலை பிரித்து தள்ளிய போலீசார், சிஐடியு தேசிய துணைத் தலைவரும், அங்கன்வாடி சங்க மாநிலத் தலைவருமான ஜி. பேபி ராணி உள்ளிட்டோரைத் தாக்கினர். இதில் பேபி ராணி உள்ளிட்ட பல ஊழியர்கள் காயமடைந்தனர். 1,000 ஊழியர்கள் கைது: ஜனநாயகப் படுகொலை மாநில பொதுச்செயலாளர் கே. சுப்பராவம்மா உள்ளிட்ட சுமார் 1,000 ஊழியர்களைக் கைது செய்த போலீஸார், அவர்களை 100 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலை யங்களுக்குக் கொண்டு சென்று அடைத்தனர். உழைக்கும் பெண்க ளின் குரலை ஒடுக்க அதிகாலை யில் நடத்தப்பட்ட இந்தத் தாக்கு தல், சந்திரபாபு அரசின் மக்கள் விரோத மனப்போக்கையும், போராட்டத்தைக் கண்டு அரசு கொண்டுள்ள அச்சத்தையுமே காட்டுகிறது என அங்கன்வாடி ஊழி யர் சம்மேளன பொதுச்செயலாளர் உஷா ராணி விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியை மறந்த முதல்வர் கடந்த ஆட்சியில் 42 நாட்கள் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்தின்போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு, அங்கன்வாடி ஊழியர்க ளை நேரில் சந்தித்து, “நான் ஆட்சி க்கு வந்தால் கௌரவ ஊதியத்தை உயர்த்துவேன்” என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், 2024-இல் ஆட்சிக்கு வந்த பிறகு பலமுறை முறையிட்டும், ஒரு ரூபாய் கூட ஊதியம் உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தை தீவிரப்படுத்த அழைப்பு அங்கன்வாடி ஊழியர்களின் இந்த உறுதியான போராட்டத்தி ற்கு அகில இந்திய சம்மேளனம் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. புதனன்று ஆந்திரா முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் போராட்டங்களும் நடந்துள்ளன. (லெப்ட் வியூஸ்)
