tamilnadu

img

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்

நாமக்கல், மார்ச் 4- ராசிபுரம் அருகே திருநங்கைகளுக்காக கலைஞர்  கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடு களுக்கான கட்டுமானப் பொருட்களை பழைய ஒப்பந்த தாரர் எடுத்து சென்றதால், ஆவேசமடைந்த திருநங்கை கள் புதுச்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட னர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆயி பாளையம் ஊராட்சி, கோப்பம்பட்டியில் கலைஞர்  கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 6 திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், ஒப்பந்ததாரர்  கட்டுமானப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளாத தால், பணி பாதியில் நிற்பதாக கூறி கடந்த டிச.31  ஆம் தேதியன்று ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவல கம் முன்பு பயனாளிகள் மறியலில் ஈடுபட்டனர். அப் போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பிப்ரவரி  மாதத்திற்குள் வீடுகளை கட்டித் தர நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்தனர். ஆனால், அதன்பிறகும் பணி கள் ஏதும் நடைபெறாததால், வேறு கட்டுமானத் தொழி லாளர்கள் மூலம் பயனாளிகள் பணியை மேற்கொண்ட னர். இதனால் ஆத்திரமடைந்த பழைய ஒப்பந்ததாரர், அங்கிருந்த கட்டுமானப் பொருட்களை ஆட்கள் மூலம்  எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய  நடவடிக்கை எடுக்கக்கோரி புதுச்சத்திரம் காவல் நிலை யத்தை பயனாளிகள் செவ்வாயன்று முற்றுகையிட்ட னர். அப்போது அங்கிருந்த போலீசார், இந்த விவகாரத் தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி, சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.