திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள், 1 மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு
சென்னை, மார்ச் 4 - திமுக கூட்டணியில் காங்கிர சுக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பி னர் இடமும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிறிஸ் சோடங்கர், நிவேதிக் ஆல்வா, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்த கை, சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் புதன்கிழமை (பிப். 4) இரவு 8.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர். அவர்கள், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுத் தலைவர் டி.ஆர். பாலு, ஆ. ராசா, திருச்சி என். சிவா, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரும் அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து, 2026 சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழு த்தானது. ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவர் கு. செல்வப் பெருந்தகை ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். இதைத்தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களும் பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
