ராஜஸ்தானில் உள்ள அரிய வகை கனிமங்களை எடுக்க இந்தியாவுடன் ஜப்பானும் பேச்சுவார்த்தை ராஜஸ்தான் மாநிலத்தின் நிலத்தடி அரிய வகை கனிமங்களை
(Rare Earths) எடுப்பதற்காக அது குறித்து கூட்டாக ஆய்வு செய்ய ஜப் பான் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின்சார வாகனங்கள், காற்றாலை கள், போர் விமானங்கள், டிரோன்கள் என தொழில் நுட்ப வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு சிப்களே அடிப்படையான மற்றும் முக்கியமான பொருளாக உள் ளன. இந்த சிப்களை மிகத் தரமானதா கவும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தேவை யான மேம்பட்ட வகையிலும் உருவாக்க அரியவகை கனிமங்கள் அவசியம். இந்த அரிய கனிம உற்பத்தியில் உலகளவில் சுமார் 60 சதவிகிதமும், அதனை சுத்திகரிப்பதில் கிட்டத்தட்ட 90 சதவிகிதமும் சீனாவிடமே உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா என செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்துறையில் போட்டியிடும் நாடுகள் அனைத்தும் சீனாவையே பெரும்பாலும் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலை மாற்ற வும் தாங்கள் விரும்பியபடி கனிம வளங்க ளை கொள்ளையடிக்கவும் சீனாவுக்கு மாற்றான அரிய கனிம வளங்கள் கொண்ட நாடுகளை நோக்கி மேற்குலக நாடுகள் படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் அமெரிக்கா, கன டா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தி யா சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தைக ளில் அரிய கனிம வளங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் முக்கிய இடம் பெற்றுள்ளன. இதில் பிரேசிலும் உள்ளது. இந்த நாடு மட்டுமே தெற்குலக நாடாகும். கடந்த மாதம், இந்திய சுரங்கத் துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்க ளில் 1.29 மில்லியன் மெட்ரிக் டன் அரிய வகை கனிம ஆக்சைடுகளைக் கொண்ட மூன்று கனிமப் பாறைப் படிவுகள் கண்ட றியப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அரிய வகை கனிமப் படிவுகளை இந்தியாவுடன் இணைந்து ஆய்வு செய்வது குறித்து வெளியுறவுத் துறையுடன் ஜப்பானும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி யுள்ளது. கடந்த ஆண்டே அரிய கனிமங் கள் தொடர்பான ஒப்பந்தத்தில் ஜப்பா னும் இந்தியாவும் கையெழுத்திட்டு விட்டன. தற்போது ராஸ்தானில் கனிமம் இருப்பதாகக் கூறப்படும் இடத்திற்கு நிபுணர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராஜஸ்தானில் கண்டுபிடிக் கப்படும் கனிமங்களை பிரித்தெடுப்பதற் கான தொழில்நுட்பத்தையும் நிதியுதவி யையும் ஜப்பான் வழங்கும். அதற்கு ஈடாக, அங்கிருந்து எடுக்கப்படும் அரிய வகை கனிமங்களை ஜப்பானுக்கு இந்தி யா தொடர்ந்து வழங்க வேண்டும் என பெயர் தெரிவிக்காத அரசு தரப்பு வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் இந்த மேற்குலக நாடு கள் கனிம வளங்களை எடுக்க துவங்கி னால் மோடி - அதானி கூட்டணியில் பெரும் கொள்ளையும் இயற்கைச் சூழல் அழி வும் ஏற்படும் அபாயம் உள்ளது என அச்சம் எழுந்துள்ளது.
