states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர் சவுரவ் தாஸ்

நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்து விவாதித்ததற்காக என்சிஇஆர்டி புத்தகத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே வேளையில், தனக்கு எதிரான ஊழல் புகார்களை எவ்வாறு கையாள்கிறது என்பதை நீதித்துறை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஈரானில் உள்நாட்டுக் கலவரத்தை தூண்டுவதற்காக குர்திஷ் படைகளுக்கு ஆயுதம் வழங்கி வருவதாகத் தகவல்கள் வருகின்றது. அடுத்து வரும் மாதங்களில் இது தங்களுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் விசுவாச நாடுகள் அனைத்தும் அறிந்துகொள்ள வேண்டும்.

திரிணாமுல் எம்.பி., சாகேத் கோகலே

கடந்த மாதம், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் பேசுகையில், “இந்தியாவிடம் 74 நாட்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளது” என்று தெரிவித்தார். ஆனால் இப்போது,  25 நாட்களுக்கு மட்டுமே எண்ணெய் இருப்பு உள்ளது” என்று கூறியுள்ளார். 

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

ஈரான் ஒரு பயங்கரமான நாடு என நிபுணர்கள் குறிப்பிடும் அதே நேரத்தில் சிஐஏ ஒரு காலத்தில் சொன்னது சரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். 1950 -இல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மொசா டெக் அரசின் அழிவு வெறும் ஆட்சிக் கவிழ்ப்பு மட்டு மல்ல, ஈரானின் ஜனநாயகமும் எண்ணெய் மற்றும் அமெரிக்க பேரரசுக்காக பலியிடப்பட்ட தருணம்.