மேற்கு வங்கத்தை மீட்டெடுக்கும் போர் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யா பிறந்தநாளில் சிபிஎம் சூளுரை!
கொல்கத்தா மேற்கு வங்கத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழுவின் முன் னாள் உறுப்பினருமான தோழர் புத்த தேவ் பட்டாச்சார்யாவின் 82-ஆவது பிறந்த நாளையொட்டி, மாநிலத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் “மீட்டெடுப்புப் போரை” (Reju venation of Bengal) கட்சியின் மாநிலக் குழு அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற எழுச்சியான நிகழ்வில் பேசிய இடதுசாரித் தலைவர்கள், தற்போதைய திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் நிலவும் ஊழல் மற்றும் சகிப்புத்தன்மையற்ற “அச்சுறுத்தல் கலாச்சாரத்திற்கு” எதிராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய தருணம் இதுவென அறைகூவல் விடுத்தனர். புத்த தேவ் பட்டாச்சார்யா தனது ஆட்சிக் காலத்தில் நிலைநாட்டிய நேர்மையான நிர்வாகம், கண்ணியமான அரசியல் மற்றும் அமைதியான சமூகச் சூழலை மீண்டும் உருவாக்க வேண்டியது காலத் தின் கட்டாயம் என தலைவர்கள் ஆணித் தரமாகத் தெரிவித்தனர். நவீன வங்கத்தின் கனவும் தொழில்மயமாக்கல் சவாலும் “விவசாயம் நமது அடிப்படை, தொழில் மயமாக்கல் நமது எதிர்காலம்” என்ற புத்ததேவ் பட்டாச்சார்யாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தொலைநோக்குப் பார்வை யைச் சிதைத்த சக்திகளுக்குப் பாடம் புகட்ட இளைஞர்கள் முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. திரிணாமுல் ஆட்சியின் தவறான கொள்கைகளால் முடங்கிக் கிடக்கும் தொழில்துறையைச் சீரமைக்கப் புதிய உத்திகள் வகுக்கப்படும் என்றும், வங்கத் தின் பாரம்பரியக் கல்வி மற்றும் பண்பாட்டு விழுமியங்களைச் சீரழிக்கும் மதவாத மற்றும் நவீன பாசிச சக்திகளுக்கு எதி ராகத் தீவிரமான கலாச்சாரப் போர் முன்னெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் புத்ததேவ் பட்டாச்சார் யா ஒரு நவீன வங்கத்தை உருவாக்க எத்தகைய கனவுகளைக்கண்டாரோ, அவற்றை மீண்டும் நனவாக்கும் முயற்சி யில் இடதுசாரிகள் சமரசமின்றிப் போரா டுவார்கள் எனத் தலைவர்கள் சூளுரைத்தனர். போராட்டத்தின் அறிவுசார் தளமாக ‘கலாச்சார மையம்’ தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் நினைவைப் போற்றும் வகையில் கொல் கத்தாவில் அமையவுள்ள புதிய ‘கலாச்சார மையம்’, வெறும் நினைவுச்சின்னமாகத் திகழாமல், மாநிலத்தை மீட்டெடுக்கும் போராட்டத்தின் அறிவுசார் தளமாக (Intell ectual Hub) விளங்கும் என இம்மாநாட் டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம் மற்றும் திரைப்படத் துறையில் புத்ததேவ் பட்டாச்சார்யா கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், இந்த மையம் நாடகம், திரைப் படம் மற்றும் இலக்கிய விவாதங்கள் வழி யாகத் தற்போதைய மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகச் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு போர்க்களமாகச் செயல் படும். குறிப்பாக, ‘நந்தன்’ (Nandan) போன்ற பண்பாட்டுத் தளங்களை அவர் எப்படிக் கட்டிக்காத்தாரோ, அதே எழுச்சி யுடன் இந்த புதிய மையமும் நவீன வங்கத்தின் அடையாளமாகத் திகழும். இரு துருவ அரசியலுக்கு மாற்றாக இடதுசாரி அரசியலை முன்னிறுத்துவோம்! “மாநிலத்தின் இழந்த பெருமையை மீட்போம்” என்ற முழக்கத்துடன், திரிணா முல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா ஆகிய இரு துருவ அரசியலுக்கு மாற்றா கத் தார்மீகச் சிறப்புமிக்க இடதுசாரி அர சியலை முன்னிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி களமிறங்கியுள்ளது. வங்கத் தின் வீதி எங்கும் தோழர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் கொள்கை முழக்கங்க ளை ஏந்திச் செல்வதன் மூலம், இளை ஞர்கள் மத்தியில் ஒரு பெரும் அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. புத்ததேவ் பட்டாச்சார்யா எதற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாரோ, அந்த நவீன, முன்னேறிய மற்றும் மதச்சார்பற்ற வங்கத்தைப் படைப்பதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என இப் பிறந்தநாள் விழா நிகழ்வில் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உறுதி ஏற்றனர். (லெப்ட் வியூஸ்)
