states

img

இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை அமைப்பு மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும்

இந்தியர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை அமைப்பு மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும்

போர் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வரும் இந்தி யர்களுக்கு உதவ வெளியுறவுத் துறை  அமைச்சகம் ஒரு கட்டுப்பாட்டு அறையை  அமைத்துள்ளது. சவூதி, குவைத், பஹரைன், ஐக்கிய அரபு அமீரகம் என மேற்கு ஆசிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தி யக் குடிமக்கள் வசிக்கின்றனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா துவக்கிய போரின் காரணமாக தற்போது மேற்கு ஆசிய நாடு களில் உள்ள அமெரிக்க ராணுவத்தளங் கள் மற்றும் தூதரகங்கள் ஈரானின் தாக்கு தலுக்கு உள்ளாகி வருகின்றன.  இதனால் அந்நாடுகளின் விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு வான் வெளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அந்நாடுகளில் உள்ள மிகப்பெரும் கோடீஸ் வர்கள் தனியார் விமான நிறுவனங்க ளுக்கு பல கோடிகள் கட்டணம் செலுத்தி வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.  எனினும் புலம் பெயர்ந்து சென்று மேற்கு ஆசிய நாடுகளில் பணியாற்று கின்ற இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு குடிமக்கள் மற்றும் அந்நாடுகளில் உள்ள ஏழை எளிய மக்கள் எப்போது வேண்டுமா னாலும் வெடிகுண்டுகளுக்கு பலியாக லாம் என்ற அபாயச் சூழலில் உள்ளனர். அவர்களில் பலரும் விமான நிலையங்கள்  மற்றும் ஓட்டல்களில் தஞ்சம் புகுந் துள்ளனர்.  ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் இருந்த நூற்றுக்கணக்கான இந்திய மாண வர்களை இந்திய தூதரகம் பாது காப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளது. இந்நிலையில் மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள் ளது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள் ளது. கட்டுப்பாட்டு அறையை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.  போர் தீவிரமடையும் நிலையில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறையாக இல்லை என்பது குறிப்பி டத்தக்கது.  கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள  1800118797 என்ற கட்டண மில்லா எண்ணும் +91 11 2301 2113, +91 11 2301 4104, +91 11 2301 7905 ஆகிய தொலை பேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன.  நிலைமையைத் தொடர்ந்து உன்னிப் பாகக் கவனித்து வருவதாகவும், நாட்டின் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்போம் என்றும், மேற்காசிய நாடுகளின் அரசாங் கங்களுடனும் பிற முக்கிய நட்பு நாடுகளுட னும்  தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது.