tamilnadu

img

ராமாபுரம் சமத்துவபுரத்தில் வடிநீர்கால்வாய், சாலை வசதிக்கு சிபிஎம் கோரிக்கை

ராமாபுரம் சமத்துவபுரத்தில் வடிநீர்கால்வாய், சாலை வசதிக்கு சிபிஎம் கோரிக்கை

ராணிப்பேட்டை, நவ.11- நெமிலி தாலுகா, மேலபுலம் அடுத்த ராமாபுரம் சமத்துவபுரம் பகுதியில் மழைநீர் சூழ்ந்து சேறும், சகதியுமாகக் காணப்படுகிறது.  மழைக்காலங்களில் பெய்த மழைநீர் வெளியேற வழியில்லாமல் மக்கள் குடியிருக்கும் பகுதியில் தேங்கி நிற்பதால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. தகவல் அறிந்து சி.பி.எம். அரக்கோணம்-நெமிலி தாலுகா செயலாளர் ஆர். வெங்கடேசன் நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு வடிநீர்க் கால்வாயுடன் சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சி.பி.எம். சார்பில் கோரிக்கை வைத்துள்ளார். உடன் தாலுகா குழு உறுப்பினர்கள் கே. சிவகுமார், நாகராஜன் உள்ளிட்டோர் இருந்தனர்.