அமெரிக்கா - இஸ்ரேலின் அடாவடிப் போரால் முடங்கும் மேற்கு மாவட்டத் தொழில்கள்!
திருப்பூர், மார்ச் 13 - வே. தூயவன் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க நடத்திவரும் அடாவடிப் போரால் மீண்டும் இந்தியா ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியை சந்திக்கத் துவங் கியுள்ளனர். மத்திய கிழக்கு நாடு களின் வான் எல்லைகள் மற்றும் செங்கடல் வழியாக ஐரோப்பா செல்லும் கப்பல் போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. இந்த போர்ச் சூழல் தமிழ்நாட்டை யும், குறிப்பாக, கோவை, திருப்பூர் ஜவுளித்துறையினரின் கோடைக் கால ஆடைகள் ஏற்று மதியை முழுமையாக பாதித்துள்ளது. கோவை வெட் கிரைண்டர் ஏற்றுமதி, நாமக்கல் முட்டை, ஈரோடு மஞ்சள் ஏற்றுமதி ஆகிய வையும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன. ஏற்கெனவே ஏற்று மதி செய்யப்பட்ட ஜவுளி, முட்டை, மஞ்சள், எஞ்சினீயரிங் பொருட்களுடன் கப்பல்கள் நடுக்கடலில் நிற்கின்றன.
இத னால், பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 10 சதவிகித ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்படும் நிலை கோவை, திருப்பூரில் ஜவு ளித் துறை பாதிப்பைச் சந்தித்துள் ளது. ஒரு மாதம் வரை போர் நீடிக்கும் என கூறப்படுவதால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என தென்னிந்திய பஞ்சாலை கள் சங்கப் பொதுச்செயலாளர் செல்வராஜ் கவலை தெரிவிக் கிறார். “மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும் சுமார் 3 மில்லியன் டாலர் வரை ஏற்றுமதி செய்யப்படு கிறது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் வரி இல்லா ஒப்ப ந்தம் போடப்பட்டுள்ளதால் ஏற்று மதி அதிகரித்துள்ளது. ஆனால் போர்ச் சூழல் காரணமாக நமது ஜவுளி ஏற்றுமதியில் 10 சதவிகி தம் அப்படியே நின்று விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பா, பிரிட்டன், அமெரி க்கா செல்லும் கப்பல் போக்கு வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் உள்ளதால், கப்பல் போக்கு வரத்துக்கு கூடுதலாக 25 நாட்கள் ஆகும். இதற்குரிய வாடகை அதிகரிக்கும். ஆர்டர்களை டெலிவரி செய்ய முடியவில்லை மேலும் போர்க் காப்பீடு பிரிமி யம் அதிகமாகி உள்ளது. கோடை க்கால ஆர்டர்களுக்கு இப் போது தான் டெலிவரியைத் துவ ங்கினோம். அதற்குள்ளாகவே டெலிவரி செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இதனால் ஆர்டர் கொடுத்தவர்கள் அபரா தம் விதிக்கும் சூழல் உள்ளது. குறித்த நேரத்தில் ஏற்றுமதி செய்ய முடியாவிட்டால் அதற் கான இழப்புகளும் ஏற்படும். டீசல் தட்டுப்பாடு, விலை உயர்வு தாண்டி, பாலிஸ்டர் விலையும் அதிகரிக்கும். இந்த தாக்கத்தை சமாளிக்க ஒன்றிய அரசு சிறப்புத் திட்டத்தை கொண்டுவர வேண்டும். ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும். கச்சா எண் ணெய் விலை தற்போதே சற்று அதிகரித்துள்ளது.
தற்போது நம்மிடம் கையிருப்பு இருந்தா லும், விலை ஏற்றம் வராமல் ஒரு மாதத்திற்கு அரசு சமாளிக்க வேண்டும். இப்போது தான் செயற்கை இழை பயன்பாட்டி ற்கு மாறி வருகிறோம். எனவே பாலிஸ்டர் விலை அதிகரிக்கா மல் இருக்க வேண்டும். சந்தை மாற்றம் ஏதும் ஏற்படக் கூடாது. இதே பிரச்சனை நமது போட்டி யாளர்களுக்கும் உள்ளது” என்கிறார் செல்வராஜ். நெருக்கடியில் வெட் கிரைண்டர்கள் ஏற்றுமதி கோயம்புத்தூரின் மிக முக்கியமான தொழிலான வெட் கிரைண்டர் உற்பத்தியையும் அமெமரிக்கப் போர் நிலை குலையச் செய்துள்ளது. கோவையில் உற்பத்தி செய்யப்படும் வெட் கிரைண்டர் கள் பெருமளவில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டு வந்த நிலை யில், தற்போது நிலவும் போர் பதற்றத்தால் இந்த ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள் ளது. இது குறித்து கவலை தெரி வித்துள்ள கோவையைச் சேர்ந்த தனியார் வெட் கிரைண்டர் உற் பத்தியாளர் குமரேசன், ஏற்க னவே தாமிரம் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி கடும் நெருக்கடியில் இருந்ததாகவும், தற்போது போர் காரணமாக அரபு நாடுகளி லிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள தால், அதன் உபபொருளான பிளாஸ்டிக் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையும் வர லாறு காணாத வகையில் உய ர்ந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
ஜிஎஸ்டி-யைக் குறைக்க கோரிக்கை போக்குவரத்து முடக்கம் மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு காரணமாக, ஒரு வெட் கிரைண்டரின் உற்பத்திச் செலவு மட்டும் தற்போது 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாகவும், ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய கிரைண்டர்கள் தேக்க மடைந்துள்ளதால் உற்பத்தியா ளர்கள் பெரும் நிதி நெருக்கடி யைச் சந்தித்து வருவதாகவும், இந்த இக்கட்டான சூழலில் இருந்து தொழிலைப் பாதுகாக்க, வெட் கிரைண்டர்களுக்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை 5 சதவிகித மாக ஒன்றிய அரசு குறைக்க வேண்டும் என்பது கோவை உற் த்தியாளர்களின் கோரிக்கை”, எனவும் குறிப்பிட்டார். திருப்பூர் பின்னலாடைத் தொழிலும் பாதிப்பு திருப்பூரில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடு களுக்கு பின்னலாடைகள் ஏற்று மதி செய்யப்படும் நிலையில், அவை பாதிப்பைச் சந்திக்கின் றன. பெட்ரோலிய பொருட்கள் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாலியஸ்டர் மூலப்பொருள் பெட்ரோலிய பொருளில் இருந்து எடுக்கப்படுவதால், தற்போது பாலியஸ்டர் நூல் விலை அதிகரித்துள்ளது. பாலியஸ்டர் விலையை உயர்த்திய ரிலையன்ஸ் போரினால் இன்னும் முழு மையான பாதிப்பு வராவிட்டா லும் கூட, பாலியஸ்டர் உற்பத்தி யில் ஏகபோக நிலையை வகிக்கும் ரிலையன்ஸ் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் பாலி யஸ்டர் விலையை உயர்த்தி யுள்ளனர். கிலோவுக்கு ரூ.30 வரை விலை அதிகரிக்கப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிருந்தே செயற்கை நூலிழை உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி யது. பாலியஸ்டர் நூல் விலை உயர்த்தப்பட்டிருப்பது ஏற்றுமதி யாளர்கள் மட்டுமின்றி உள் நாட்டு ஆடை உற்பத்தியாளர் களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பேக்கிங் மெட்டீரியல் களும் பாலியஸ்டர் சார்ந்தவை என்பதால் அவற்றின் விலையும் உயர்த்தப்பட்டிருக்கிறது. சாயக் கட்டணமும் அதிகரித்துள்ளது. நாமக்கல்லில் 3.50 கோடி முட்டைகள் தேக்கம்! நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட முட்டை கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 7கோடிக்கும் அதிகமான முட்டை கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தினம்தோறும் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஒரு கோடி முட்டைகள் வரை அனுப்பப்படுகின்றன. அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. புதிதாக அமெ ரிக்காவுக்கும் முட்டை ஏற்றுமதி தொடங்கியுள்ளது. குறிப்பாக நாமக்கல் லில் இருந்து ஈரான், அமெரிக்கா, கத்தார், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு நாள் ஒன்றுக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இனவெறி இஸ்ரேலும், ஏகாதி பத்திய அமெரிக்காவும் சேர்ந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்தி தொடக்கி வைத்த போர் காரணமாக, நாமக்கல் முட்டை ஏற்றுமதி கணிசமாக சரிந்துள்ளது. விலையும் வீழ்ந்து விட்டது. ஏற்கெ னவே கோடைக் காலம் தொடக்கம், ரம்ஜான் நோன்பு காரணமாக முட்டை நுகர்வு குறைந்த நிலையில் இந்த போர் முட்டை உற்பத்தி தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வளைகுடா நாடுகளுக்குக் கப்ப லில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டை கள் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டி ருப்பதாக ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் பெரு மளவு முட்டை அனுப்பப்படும் துபாய், குவைத், கத்தார், ஓமன் போன்ற இடங்களுக்கு ஏற்றுமதி நிறுத்தப்பட்டு விட்டது. நாமக்கல் மண்டலத்தில் 1 கோடிக்கும் அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. தினமும் ரூ. 5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு முட்டை ரூ. 7 வரை விற்கப்பட்டு வந்தது. மார்ச் தொடக்கத்தில் ரூ. 4.60 பைசா என்று குறைந்தது. போர் நீடிக்கும் நிலையில், ஏற்றுமதி பாதித்து உள்ளதால், முட்டை தேக்கம் அதிகரித்து, உற்பத்தி சரிந்து விட்டது. அதேசமயம் முட்டை விலை மேலும் சரிந்து 4 ரூபாய் 30 காசுகளாகவும், சில பகுதி களில் மேலும் குறைவாகவும் நிர்ணயிக் கப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தியா ளர்கள் மட்டுமின்றி முட்டை ஏற்றுமதி செய்யும் விநியோகத் தொடர்பில் இருக்கும் பலரும் இதனால் பாதிக்கப் படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மஞ்சள் விவசாயிகளுக்கு இழப்பு புவிசார் குறியீடு பெற்றுள்ள ஈரோடு மஞ்சள் மருத்துவக் குணம் மிக்கது. குக்குமின் எனும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள மஞ்சள் வளைகுடா நாடு களுக்கு அதிகளவு ஏற்றுமதி ஆகிறது. தற்போதுள்ள போர்ச் சூழல் காரண மாக மஞ்சள் ஏற்றுமதி வர்த்தகம் பாதித் துள்ளது. 12 வருடம் கெட்டுப் போகாத தன்மை கொண்டதாக இருந்தாலும், மஞ்சளை விவசாயிகள் இருப்பு வைத்திருக்க மாட்டார்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்கள் தான் அறுவடைக் காலம். அப்போது மஞ்சளை விற்றுத் தான் தங்கள் குடும்பத்தின் தேவை களை விவசாயிகள் சமாளிப்பார்கள். ஆனால், கப்பலில் அனுப்பப்பட்ட மஞ்சள் போர் காரணமாக முடங்கியுள்ள தால், அதற்குரிய பணம் உடனடி யாக வராது. விவசாயிகள் இருப்பு வைக் காத நிலையில், இடைத்தரகர்கள் மூலம் பெரும் வர்த்தகர்கள் மஞ்சளை குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி இருப்பு வைத்துக் கொள் வார்கள்.
மொத்தத்தில் விவசாயிகள் விளைவித்த மஞ்சளுக்கு நியாயமான விலை கிடைக்காததுடன், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் குறை யும், பணப்புழக்கம் குறையும், இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் விவசாயி களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்று ஈரோடு மஞ்சள் விவசாயிகள் தெரிவித்தனர். இந்திய அரசு மாற்று வழியை காண வலியுறுத்தல் இந்தப் பின்னணியில் தான், போர் இப்போதைக்கு முடிவதாகத் தெரியாத நிலையில், இந்திய அரசு மாற்று வழி களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியா ளர் உற்பத்தியாளர் சங்கத் (டீமா) தலை வர் எம்.பி. முத்துரத்தினம் வலியுறுத்தி யுள்ளார். இந்த போரினால் கண்டெய்னர் கட்டணம் 4 மடங்கு உயர்ந்து விட்டது. தற்போது இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் போட்டிருந்தாலும் அது உடனடியாக பலன் அளிக்காது. எதிர் காலத்தில் கை கொடுக்கும். அதேசமயம் பெட்ரோ லிய பொருட்களின் தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக பாலியஸ்டர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் மீண்டும் கொரோனா காலத்தில் இருந்த நிலைக்குப் போய்விடுவோமோ என்ற அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது என்றும் எம்.பி. முத்து ரத்தி னம் கவலை தெரிவித்தார்.
