தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் நோட்டீஸ்
புதுதில்லி இந்திய தலைமைத் தேர்தல் ஆணை யராக ஞானேஷ் குமார் உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2023ஆம் ஆண்டின் புதிய சட்டத்தின் (தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டம், 2023) கீழ் நியமிக்கப்பட்ட முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். ஞானேஷ் குமார் தலை மைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற பின் தேர்தல் அறிவிப்பு, தேர்தல் முடிவுகள், வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மூலம் ஒன்றிய பாஜக அரசின் பலமாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சி களின் ‘இந்தியா’ கூட்டணி தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றது. குறிப்பாக எஸ்ஐஆர் என அழைக்கப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 193 எம்.பி.,க்கள் : ஆம் ஆத்மியும் ஆதரவு இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தலை மைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை நீக்கக் கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். நாடாளுமன்ற வரலாற்றில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இணையான அதிகாரம் கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க நோட்டீஸ் சமர்ப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். மக்களவையில் 130 எம்.பி.,க்கள் மற்றும் மாநிலங்களவையில் 63 எம்.பி.,க்கள் என மொத்தம் 193 எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இந்த நோட்டீஸில் கையெழுத் திட்டுள்ளனர். கூட்டணியில் இல்லையென்றா லும் ஆம் ஆத்மி எம்.பி.,க்கள் கையெழுத் திட்ட இந்த நோட்டீஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளி லும் வெள்ளிக்கிழமை சமர்பிக்கப்பட்டது. நோட்டீஸில் 7 குற்றச்சாட்டுகள் பட்டியலிடப் பட்டுள்ளன. இதில் “பதவியில் இருக்கும் போது பாகுபாடான நடத்தை”, “தேர்தல் மோசடி விசாரணைகளைத் திட்டமிட்டுத் தடுத்தல்” மற்றும் “பெரிய அளவிலான வாக்கா ளர் உரிமை பறிப்பு” ஆகியவை அடங்கும். மக்களவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்க ளவையில் நிதி ஒதுக்கீட்டு மசோதா 2026-ஐ தாக்கல் செய்தார். 2025-26 நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்காக இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து பணம் எடுக்க அனுமதி கோரும் இந்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. உர மானியம், லடாக் மற்றும் மணிப்பூர் தொகுப்புகள், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட தேவை களுக்காகக் கொண்டுவரப்பட்ட கோரிக்கை களும் நிறைவேற்றப்பட்டன. அதே போல 2019-ஆம் ஆண்டின் திரு நங்கைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில் “சுய அடை யாள உரிமை” என்ற அம்சம் நீக்கப்பட்டு, சமூக-கலாச்சார அடையாளங்கள் (அர வாணி, கிண்ணர், ஹிஜ்ரா போன்றவை) மற்றும் உடலியல் மாற்றங்களின் அடிப்படை யில் புதிய வரையறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. விவாதிக்க மறுப்பு : ஒத்திவைப்பு சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி இந்தியா கூட்டணி எம்.பி., முழக்க மிட்டனர். இதனால் காலை 11 மணிக்கே அவை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி எனப் பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதி யாக மார்ச் 16 திங்கட்கிழமை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி., ரேணுகா சவுத்ரி காலநிலை தாங்கும் விவசாயம் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு மசோதா, 2025 மற்றும் நிலம் கையகப்படுத்து தல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டத் திருத்த மசோதா என இரண்டு தனி நபர் மசோதாக்களை தாக்கல் செய்தார்.
