tamilnadu

கொ.ம.தே. கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

கொ.ம.தே. கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!

சென்னை, மார்ச் 13 - சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்கு நாடு  மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் குழு வெள்ளிக்கிழமை (மார்ச் 13) அன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில், இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தத்தில், திமுக தலை வரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டா லின், கொ.ம.தே.க. தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்ட னர். இந்த இரண்டு தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே கொ.ம.தே.க. போட்டியிட உள்ளது.