tamilnadu

img

எல்பிஜி பற்றாக்குறையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மூச்சுத் திணறும் அபாயம்!

எல்பிஜி பற்றாக்குறையால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மூச்சுத் திணறும் அபாயம்!

சென்னை, மார்ச் 12 - எல்பிஜி பற்றாக்குறை தொடர்ந்தால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூச்சுத்திணறும், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் என்றும் அரசுகள் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் இந்திய தொழில் முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் தேசியத் தலைவர் கே.இ.ரகுநாதன் கூறியிருப்பதாவது: நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் எல்பிஜி பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோலிய விலைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையை மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளி வருகின்றன. சிறு தொழிற் சாலைகள், உணவகங்கள், உணவு பதப் படுத்தும் நிறுவனங்கள் மற்றும் பல உற்பத்தி துறைகளுக்கு எல்பிஜி என்பது வெறும் எரிபொருள் அல்ல, அது அவர் களின் தினசரி உற்பத்தியின் உயிர்நாடி. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறு வனங்கள் துறைகள் பெரும்பாலும் 5 முதல் 7 சதவிகிதம் போன்ற மிகவும் குறைந்த லாப விகிதத்தில் தான் இயங்குகின்றன. இந்நிலையில் எல்பிஜி விநியோகம் தடுமாறினாலோ அல்லது விலை தொடர்ந்து உயர்ந்தா லோ, பல தொழிற்சா லைகள் உற்பத்தியை குறைக்கவும், பணி யாளர்களை குறைக் கவும் அல்லது நிறு வனங்களைத் தற்காலிகமாக மூட வேண் டிய நிலை உருவாகும். ஏற்கனவே பல சிறு ஏற்றுமதியாளர்கள் சரக்கு அனுப்புவதில் கடும் சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் இறக்குமதியில் ஏற்படும் தடங்கல்களால் சிரமப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதுவரை அமைதியான பார்வையாளர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியது. இது  ஒரு சாதாரண எரிசக்தி பிரச்சனை அல்ல, சிறு தொழில்களையும், அதன் நம்பியிருப்  போரின் வாழ்வாதாரத்தையும் கேள்விக் குறியாக்கி இருப்பதாகும். உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  துறைகள் மற்றும் அத்தியாவசிய தொழில்களுக்கு எல்பிஜி விநியோகத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங் கள் துறைகள் பயன்படுத்தும் பெட்ரோலிய எரிபொருட்களுக்கு கலால் வரி மற்றும் வாட் வரிகளை தற்காலிகமாக குறைக்க வேண்டும். மின்சாரக் கட்டணங்களில் கூடுதல் சலுகை மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும். கமர்ஷியல் எல்பிஜி சிலிண்டர்களின் பதுக்கல், திசைதிருப்பல் மற்றும் கருப்புச் சந்தையை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டும். தொழில்துறை மையங்களில் பிஎன்ஜி விநியோகத்தை விரைவாக விரிவுபடுத்தி அவசர கையிருப்பு உருவாக்க வேண்டும். உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான குறு, சிறு  மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடுமை யான நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.  இவ்வாறு கே.இ. ரகுநாதன் கூறியுள் ளார்.