சிபிஐ எம்.பி., சந்தோஷ்
நாடு முழுவதும் குறிப்பாக பெரு நகரங்கள்தோறும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. கிராமங்களில்கூட சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளது. இந்த நிலைமைக்கு உண்மையான குற்றவாளி யார்? எல்பிஜி சிலிண்டர் விநியோகம் எவ்வித இடையூறும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அவர்கள் ஏன் எங்களை குறைகூற வேண்டும்?
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
மேற்கு ஆசியாவில் போர்ப் பதற்றம் இன்னும் குறையவில்லை. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக வரும் இந்தியாவின் 90% எல்பிஜி சிலிண்டர் இறக்குமதி முழுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் ஒன்றிய மோடி அரசு இதனை அலட்சியமாகக் கையாண்டு வருகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்
ஒன்றிய ஆட்சியாளர்கள் யதார்த்தத்தில் வாழவில்லை. அவர்கள் கனவுலகில் வாழ்கிறார்கள். இந்த யதார்த்தம் அவர்களை பாதிக்கவில்லை. மோடி அரசின் தவறான அணுகுமுறையாலும் வெளியுறவுக் கொள்கையாலுமே பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
பத்திரிகையாளர் மீரா சீனிவாசன்
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் ; இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல் மீது அமெரிக்கா நடத்தியத் தாக்குதல் தொடர்பாக இந்தியா இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டிக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை இந்தியா இணைந்து முன்மொழிகிறது. இந்திய அரசின் நிலைப்பாடு சரியில்லை. மோசமடைந்து வருகிறது.
