பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வ பங்கு வகிக்க வேண்டும்
எஸ். ஜெய்சங்கரிடம் ஈரான் வேண்டுகோள் புதுதில்லி, மார்ச் 13 - மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார். பிப்ரவரி இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து இரு அமைச்சர்களுக்கும் இடையே, வியாழனன்று 4-ஆவது முறையாக இந்த உரையாடல் நடைபெற்றது. இந்நிலையில், ஜெய்சங் கர் உடனான உரையாடலில் தங்கன் தற்காப்புக்கான சட்டப்பூர்வமான உரிமை யை பயன்படுத்துவதில் ஈரான் உறுதியாக இருப்ப தாக அரக்சி தெரிவித்ததாக வும், ஈரான் மீதான ராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும்; தற்போதைய இக்கட்டான சூழலில் மேற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் உறுதித் தன்மையை நிலைநாட்ட ‘பிரிக்ஸ்’ அமைப்பு ஒரு ஆக் கப்பூர்வமான பங்கு வகிக்க வேண்டியது அவசியம் என்று ‘பிரிக்ஸ்’ உறுப்பின ரான இந்தியாவை அரக்சி கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இதனிடையே, “ஹோர்முஸ் நீரிணையை இந்தியக் கப்பல்கள் பாது காப்பாக கடப்பதற்கு ஈரான் அமைச்சருடன், வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி வரு கிறார். எனினும், ஈரான் அனு மதி கொடுப்பது தொடர்பாக வெளியாகும் செய்தி களுக்குப் பதில் சொல்வது சரியாக இருக்காது” என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.