நினைவு தினத்தில் போர் வீரர்களுக்கு மரியாதை
நாட்டின் பாதுகாப்புக்காகப் பணியாற்றி உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் வகையில் செவ்வாயன்று (நவ.11) சென்னை போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வை, தென்மண்டலப் பகுதியின் ராணுவ தளபதி கடற்படையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதித் தலைவர் தாம்பரம் விமானப் படைத் தலைவர் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் துணைத் தலைமை ஆய்வாளர் ஆகியோர் முன்னின்று நடத்தினர். இவர்களுடன் முன்னாள் படைவீரர்களும் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.