tamilnadu

img

வேலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வட்டக் கிளைத் தலைவர் என். கணபதி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் பா. ரவி ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைத்தும், மாநில துணைத் தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி நிறைவு செய்தும் பேசினர். வட்டக் கிளைச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், பொருளாளர் எம். நெடுமால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் மற்றும் 70 வயது நிறைவு செய்தவர்களுக்குக் கூடுதல் ஓய்வூதியம் 10 விழுக்காடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.