tamilnadu

img

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாடமி விருது! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

புதுதில்லி, மார்ச் 16- 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு அறி விக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்’ என்ற நூலுக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் இலக்கி யத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப் பட்டு, அந்தந்த மொழிகளில் எழுத்தா ளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். அதன்படி 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை, ச. தமிழ்ச்செல்வனுக்கு வழங்க சாகித்ய அகாடமி தேர்வுக்குழு முடிவு செய்த நிலையில், அந்த அறிவிப்பை கடைசி நேரத்தில் ஒன்றிய பாஜக அரசின்  கலாச்சாரத்துறை அமைச்ச கம் தலையிட்டு தடுத்து நிறுத்தியது. அரசியல் கார ணங்களுக்காகவே இவ்வாறு செய்யப்பட்டி ருப்பதாகவும், சுயேட்சை யான சாகித்ய அகாடமி அமைப்புக்குள்ளும் பாஜக அரசு தலையீடு செய்வதாகவும் அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு, சாகித்ய அகாடமி, அதிகாரப்பூர்வ மாக விருது பட்டியலை வெளி யிட்டுள்ளது. அதில், ‘தமிழ்ச் சிறுகதை யின் தடங்கள்’ என்ற நூலுக்காக ச. தமிழ்ச் செல்வனுக்கு அதிகாரப்பூர்வமாக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப் பட்டுள்ளது. இதையொட்டி, எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட அரசியல் தலை வர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். (சிபிஎம் வாழ்த்து - பக்கம் 3)