tamilnadu

img

சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்!

சாமிக்குக் கொடுப்பதும்  கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்!

கண்டாச்சிபுரம் பொதுக்கூட்டத்தில்  கே. பாலகிருஷ்ணன் பேச்சு கண்டாச்சிபுரம், மார்ச் 16 - விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் கடை வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (மார்ச் 14)  நடைபெற்றது.  இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், ‘நிதியைப் பொறுத்தவரை சாமிக்குக் கொடுப்ப தும், கம்யூனிஸ்டுகளுக்கு கொடுப்பதும் ஒன்று தான்’ என இன்றைய இளம் தலைமுறையினர் பெருமிதத்துடன் கூறுவதாக தெரிவித்தார். கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரி கள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராம மாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்தி ருந்த பணத்தை அப்படியே வழங்கினார். ‘சாமி க்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார். இது இளைய தலைமுறையினர் மத்தியில் கட்சிக்கு உள்ள செல்வாக்கைக் காட்டுகிறது. மற்ற கட்சிகள் பணம் கொடுத்துக்  கூட்டத்தைக் கூட்டுகின்றன. ஆனால், கம்யூ னிஸ்ட் கூட்டங்களுக்கு மக்கள் தங்கள் சொந்தப்பணத்தில் ஆர்வத்துடன் திரண்டு வருகிறார்கள். நாங்கள் யாரையும் வாடகைக்கு அழைத்து வந்து கூட்டம் நடத்துவதில்லை. அந்தத் தைரியத்தில்தான் மக்களிடம் உரிமையோடு நிதி கேட்கிறோம் என்றார். போராட்டங்களால்  கிடைத்த உரிமைகள் “நாங்கள் ஆளும் கட்சியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஆளும் கட்சிகள் சாதித்ததை விடவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களால் மக்கள் பெற்ற உரிமைகளும் பலன்களும் அதிகம். பாதிப்பு கள் எங்கு நடந்தாலும் முதலில் குரல் கொடுக்கும் இயக்கமாக கம்யூனிஸ்ட் கட்சி திகழ்கிறது” என்றும் அவர் பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். “சாதாரண விவசாயிகள் மற்றும் தூய்மைப் பணி யாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் நிலையில், அது நியாயமான முறையில் செயல்படு வதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறிய கே. பால கிருஷ்ணன், ‘மக்களின் பிரச்சனைகளைச் சட்டமன்றத்தில் உரக்கப் பேச கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிக உறுப்பினர்க ளின் பலம் தேவை” எனவும் வலியுறுத்தினார். வட்டச் செயலாளர் எஸ். கணபதி தலைமையில் நடை பெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பி னர் ஆர். ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கீதா, மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சு. வேல்மாறன், பி. குமார், எஸ்.  முத்துக்குமரன், ஏ. சங்கரன், ஜி. ராஜேந்திரன், ஆர்.டி. முருகன், ஆர். மூர்த்தி, எஸ். அறிவழகன், மூத்த உறுப்பி னர் வி. உதயக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். தாண்டவராயன், எம். முத்துவேல் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.