tamilnadu

சிபிஎம் தலைமையில் அரை நூற்றாண்டு நடைபெற்ற போராட்டம் பாரதியார் பல்கலை.க்கு எடுத்த நிலங்களுக்கு 45 ஆண்டிற்குப் பின் ரூ. 164 கோடி இழப்பீடு!

சிபிஎம் தலைமையில் அரை நூற்றாண்டு நடைபெற்ற போராட்டம் பாரதியார் பல்கலை.க்கு எடுத்த நிலங்களுக்கு 45 ஆண்டிற்குப் பின் ரூ. 164 கோடி இழப்பீடு!

சென்னை, மார்ச் 16 - பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு, 45 ஆண்டுகளுக்குப் பின், ரூ. 164 கோடி இழப்பீடு வழங்கு வதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டி ருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுப் பாராட்டியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கோவையில் 45 ஆண்டு களுக்கு முன்பு வடவள்ளி, சோமையம் பாளையம் மற்றும் வீரபாண்டி கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 924 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்க 14.03.2026 அன்று தமிழ்நாடு அர சாங்கம் அரசாணை வெளியிட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு மூலம் இழப்பீடு இழுத்தடிப்பு கோவை பாரதியார் பல்கலைக்கழ கத்திற்காக நிலத்தை கையகப் படுத்தியபோது அப்போதைய அரசாங் கம் ஒரு சென்ட்டுக்கு ரூ. 33 முதல் ரூ.  85 வரை மட்டுமே நிர்ணயித்தது. இந்த  அற்பத்தொகையை ஏற்க மறுத்து விவ சாயிகள் நீதிமன்றத்தை நாடினர். 2002-ஆம் ஆண்டு நீதிமன்றம் விவ சாயிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பிறகும் அரசு தொடர்ச்சியாக மேல்முறை யீடு செய்து கொண்டே இருந்தது. இறுதி தீர்ப்பு வந்த பிறகும் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமலேயே இழுத்தடிக்கப்பட்டு வந்தது. சிபிஎம் போராட்டத்தால் கிடைத்த வட்டித் தொகை இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் 2013 முதல் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காகப் போராடி வந்தன. 2013-ஆம் ஆண்டு வட்டித் தொகை ரூ. 43 கோடியை மட்டும் அரசு விடுவித்தது.  கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடந்ததையொட்டி அரசு டன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டே இருந்தது. துறை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரிடம் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்தது. நேரடி தலையீடு மூலம் தீர்வு கண்ட முதல்வர் தற்போது 14.03.2026 அன்று தமிழ்நாடு அரசு 164 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஆணை வெளியிட்டுள்ளது. 45 ஆண்டு காலம் வீதியிலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் காரணமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தொடர் முயற்சியின் காரணமாகவும் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உறுதியாக போராடிய விவசாயிகளுக்கும், ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலமாக நீடித்தப் பிரச்சனைக்கு நேரடி தலையீட்டின் மூலம் தீர்வு கண்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.