states

img

இந்திய நிறுவனங்களின் 4,335 விமான சேவைகளை ரத்து

இந்திய நிறுவனங்களின் 4,335 விமான சேவைகளை ரத்து

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்திய நிறு வனங்கள் 4,335 விமான சேவை களை ரத்து செய்துள்ளதாக நாடாளு மன்றத்தில் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் திங்களன்று கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விக்கு பதில ளித்த அமைச்சர் கே.ராம்மோகன் மேலும் கூறுகையில்,“மேற்கு ஆசியாவில் வான்வெளி மூடப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள ரத்து நடவடிக்கைகளை பொறுத்தவரை, ஒட்டுமொத்தமாக இது வரை இந்திய விமான நிறுவனங்கள் 4,335 விமானங்களையும், வெளிநாட்டு நிறுவ னங்கள் 1,187 விமானங்களையும் ரத்து செய்துள்ளன. விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்கே அமைச்சகம் முதலிடம் அளிக்கும்” என அவர் கூறினார்.