states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் சச்சின் பைலட்

மோடி அரசு அமெரிக்காவுடன் செய்துள்ள ஒப்பந்தம் கடும் அழுத்தத்தின் கீழ் செய்யப்பட்டது என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும். இத்தகைய ஒப்பந்தம் செய்திருக்கக் கூடாது. இந்திய சந்தைகள் அனைத்தையும் அமெரிக்காவிற்காக திறந்துவிட்டுள்ளார்கள். இது விவசாயிகளுக்கு மிக மோசமான பின்விளைவை ஏற்படுத்தும்.

திரிணாமுல் மூத்த தலைவர் ஜெய்பிரகாஷ் மஜும்தார்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜக அனைத்து தந்திரங்களையும் கையாள்கிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் விருப்பப்படியே செயல்பட்டு வருகிறது. எஸ்ஐஆர் விசாரணையில் உள்ள 60 லட்சம் வாக்காளர்கள் இல்லாமலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இது வன்முறைக்கு கூட வழிவகுக்கும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

பீகாரில் ஒரு மாநிலங்களவை இடத்தில் ‘இந்தியா’ கூட்டணி ஆதரவு வேட்பாளர் அமர்நாத் பூரி (ஆர்ஜேடி) போராடி வெற்றி பெற்றுள்ளார். 6 வாக்குகள் குறைவாக இருந்தன. மண்டியிடுவதற்குப் பதிலாக பாஜகவை எதிர்த்துப் போராட நாங்கள் முடிவு செய்து, வேட்பாளர்களைக் களமிறக்கினோம். ஏஐஎம்ஐஎம்  மற்றும் பிஎஸ்பி ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து 6 வாக்குகள் பற்றாக்குறையை ஈடுகட்டின.

ஜேஎம்எம் எம்.பி., மஹுவா மாஜி

எல்பிஜி எரிவாயு நெருக்கடி காரணமாக நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வரும் வேளையில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அமைதியை உறுதி செய்ய வேண்டியது ஒன்றிய அரசின் கடமையாகும்.