tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சில்லென்ற கோயம்புத்தூர்

கோவை, நவ.11- கோவை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிக ளில் திடீரென கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே வெயி லின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அவ்வப் போது சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், செவ்வா யன்று காலை முதல் கோவை மாவட்டத்தின் மாநகர் மற்றும்  புறநகர் பகுதிகளில் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மதியத்திற்கு மேல் கோவை பேரூர், மாதம்பட்டி, மதுக் கரை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், மாநகரின் பல்வேறு  பகுதிகளிலும் பனிப்பொழிய துவங்கியது. இதன் காரணமாக மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு வாகனங்களை இயக்கி னர். குறிப்பாக மேம்பாலங்களில் எதிரெதிரே வரும் வாகனங் கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டமானது காணப்பட்டது. மேலும், இந்த பணி மூட்டத்தால் மாவட்டம் முழுவதும் குளிர்ச் சியான சூழல் ஏற்பட்டது.

ரூ.3.57 லட்சத்திற்கு பட்டுக்கூடு ஏலம்

தருமபுரி, நவ.11- தருமபுரியில் ஞாயிறன்று நடைபெற்ற பட்டுக்கூடு ஏலத் தில், ரூ.3.57 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. தருமபுரி 4 ரோடு அருகே அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி  உள்ளது. இந்த அரசு அங்காடிக்கு தருமபுரி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 12 விவசாயிகள், ஞாயி றன்று வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தி ருந்தனர். மொத்தம் 564.850 கிலோ வந்திருந்தது. பட்டுக்கூடு கள் 19 தொகுதிகளாக ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்தன. தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.735, குறைந்தபட்சமாக ரூ.442, சராசரியாக ரூ.630.83 விலை  நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.3 லட்சத்து 57 ஆயி ரத்து 528க்கு வர்த்தகம் நடைபெற்றது என அதிகாரிகள் தெரி வித்தனர்.

மேட்டுப்பாளையத்தில் தங்க நகை திருட்டு

மேட்டுப்பாளையம், நவ.11- மேட்டுப்பாளையத்தில் நகை வாங்குவது போல் நடித்து  தங்க நகையை எடுத்துக்கொண்டு கவரிங் நகை வைத்து நகைக்கடையில் நூதன திருட்டு சிசிடிவி காட்சிகள் வைர லாகி வருகிறது. மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள காந்தி சிலை அருகே உள்ள நகைக்கடையில், இரு பெண்கள் நகை  வாங்க வந்துள்ளனர். அவர்கள் மாடல்களை காண்பிக்க கூறி,  நகைக்கடை பெண் ஊழியர் அசந்த வேளையில் தாங்கள்  ஏற்கனவே கைப்பையில் தயாராக வைத்திருந்த கவரிங்  நகையை அந்த ட்ரேயில் வைத்து விட்டு தங்க நகையை  எடுத்து மீண்டும் தங்களது கைப்பைக்குள் எவருக்கும் தெரியா மல் வைத்து கொண்டனர். தொடர்ந்து சற்று நேரம் வேறு டிசைன் நகை பார்ப்பது போல நாடகமாடி விட்டு எதுவும் தெரியாதது போல் மீண்டும்  வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். பெண்கள் சென்ற பின் னர் கடையின் ஊழியர் நகைகளை சரிபார்த்த போது சுமார் 8 முதல் 10 கிராம் வரை எடையுள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கடை  உரிமையாளர் உட்பட அனைவரும் அங்கு பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்த போது அதில்  நகையை டிப்டாப் பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து  ஒரிஜினல் நகையை எடுத்துக்கொண்டு கவரிங் நகையை வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகை கடையின் உரிமையாளர் மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சி களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.