ராணிப்பேட்டையில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறியும்
முகாம் ராணிப்பேட்டை, நவ.11- டிஎம்பி வங்கியில் 104-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, இராணிப்பேட்டை கிளை மற்றும் இராணிப்பேட்டை லயன்ஸ் சங்கம் இணைந்து, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம் மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை நடத்தின. செவ்வாயன்று (நவம்பர் 11) முத்துக்கடையில் நடைபெற்ற இந்த முகாமை ஏ.கே.எம். குரூப் ஆஃப் கம்பெனி நிறுவனர் ஏ.கே.எம். லோகேஷ் துவக்கி வைத்தார். இந்த முகாமில் வி.சி.க. மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, மரு. பி. ஷாலினி, வங்கியின் மேலாளர் எம். சிவகிருஷ்ணன், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் என்.டி. பாஸ்கரன், தலைவர் ஏ.கே. பாலகிருஷ்ணன், செயலாளர் பி. ராதா, பொருளாளர் ஆர். சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
