tamilnadu

img

தேனியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

தேனியில் துணை ராணுவம் கொடி அணிவகுப்பு  

தேனி,மார்ச் 10- தேனியில் மத்திய துணை ராணுவப் படை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதனை போலீஸ் ஏடிஎஸ்பி.மகேஷ் தொடங்கி வைத்தார். பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோயில் அருகே தொடங்கிய ஊர்வலம் தேனி பங்களாமேடு வரை சென்றது. இதில் சிஆர்பிஎப், தேனி மாவட்ட சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், ஆயுதப்படை காவலர்கள், டிஎஸ்பிக்கள் சூரக்குமார், சீதாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், சட்டம் ஒழுங்கை உறுதி செய்யவும் அணிவகுப்பு நடைபெற்றதாக போலீ ஸார் கூறினர். தொடர்ந்து எஸ்பி.சினேகபிரியா தலைமையில் ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் நேரத்தில் மத்திய பாது காப்பு படையினர், போலீஸார் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் ரோந்து பணிகள் குறித்து விளக்கப்பட்டது.