போர்ச் சூழலில் லாபம் ஈட்டும் ஜி-7 நாடுகள் எண்ணெய் இருப்புகளை விற்பனை செய்ய திட்டம்
வாஷிங்டன், மார்ச் 10- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் தங்கள் சேமிப்பில் உள்ள கச்சா எண் ணெய்யை விற்பனை செய்ய சர்வதேச எரிசக்தி முகமையு டன் (IEA) இணைந்து ஜி-7 நாடுகள் திட்டமிடுகின்றன. திங்கட்கிழமை ஆசிய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை 24 சதவிகிதம் உயர்ந்து பேரல் 119 டாலர் வரை எட்டியது. இந்தச் சூழலில் உலகின் பெரும் பணக்கார நாடுக ளின் கூட்டமைப்பான ஜி-7 அவர்கள் வசம் உள்ள கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து போர்க் காலத்தில் அதிக லாபம் பார்க்க திட்டமிட்டு வருகின்றன. அமெரிக்கா உட்பட மூன்று நாடுகள் இந்த முடிவுக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளன. சர்வதேச எரிசக்தி முகமை அமைப்பின் உறுப்பு நாடுகளிடம் உள்ள 1.2 பில் லியன் பேரல் இருப்பில் இருந்து, சுமார் 300 முதல் 400 மில்லி யன் பேரல்களை (சுமார் 25% முதல் 30%) சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்து லாபம் பார்க்க அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
உலகளாவிய உலோகச் சந்தையில் கடும் விலை ஏற்ற இறக்கம் சரக்குக் கப்பல் போக்குவரத்து முடக்கத்தால் நெருக்கடி!
லண்டன், மார்ச் 10- ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்கா வின் போர் உலகம் முழுவதும் பெரும் பொரு ளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது. குறிப்பாக சரக்குக் கப்பல் போக்குவரத்தில் (Cargo disruptions) ஏற்பட்டுள்ள இடை யூறுகள், சர்வதேச உலோகச் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கெனவே 2026 இல் பலமுறை விலை மாற்றங்களைக் கண்டுள்ள உலோ கச் சந்தை, தற்போது நிலவும் போர்ச் சூழ லால் மேலும் நிலையற்ற தன்மையை (Vola tility) அடையும் என வர்த்தகர்கள் எச்சரித் துள்ளனர். முடங்கும் சரக்குப் போக்குவரத்து ஹார்முஸ் நீரினை, இந்தியப் பெருங் கடல், செங்கடல் உள்ளிட்ட முக்கியக் கடல் வழிப் பாதைகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் கார ணமாக, தங்கம், வெள்ளி, தாமிரம், அலுமினி யம் உள்ளிட்ட உலோகங்களின் ஏற்றுமதி இறக்குமதிகள் முடங்கியுள்ளன. போர்ச் சூழலால் கப்பல்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால், போக்கு வரத்துச் செலவு அதிகரிப்பதோடு விநியோ கத்திலும் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது உலகளாவிய தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் வரத்தைப் பாதித்துள்ளது. விலையில் கடும் ஏற்ற இறக்கம் ஏற்கெனவே வர்த்தக விநியோகச் சங்கிலி பாதித்துள்ளதால் உலோகங்களின் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நிலையற்றதாக இருந்தது. தற்போது போர் தீவிரமடைந்துள்ள நிலை யில், குறிப்பாக அலுமினியம் மற்றும் தாமி ரம் போன்ற தொழில்துறை உலோகங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வர்த்தகர்கள் தங்களின் முதலீடுகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்படுவதால், சந்தையில் உலோகங்களின் விலையில் பெரும் மாற்றங்கள் (Sharp swings) ஏற்பட்டு வருகின்றன. உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் பாதிப்பு உலோகங்களின் விலை நிலையற்ற தாக இருப்பதால், கார் மற்றும் மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்க ளின் உற்பத்திச் செலவைக் கணக்கிடுவதில் பெரும் சவாலைச் சந்தித்து வருகின்றன. சரக்குப் போக்குவரத்து விரைவாகச் சீரடையாவிட்டால், போரின் காரணமாக எரிபொருள் விலையும் அதிகரித்துள்ள நிலை யில், உலோக விலையேற்றமும் சேர்ந்து கொள்வது உலகளாவிய பணவீக்கத்திற்கு வழி வகுக்கும் உலோகச் சந்தை நீண்ட காலத் தேக்க நிலைக்குத் தள்ளப்படும் எனப் பொ ருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி பாகிஸ்தானில் 2 வாரம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
இஸ்லாமாபாத், மார்ச் 10- எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பாகிஸ்தானில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு 2 வாரங்கள் விடுமுறை அளித்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். சர்வதேசச் சந்தை யில் கச்சா எண்ணெய் விநியோகம் தடை பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் பெரும் எரிபொருள் நெருக்கடி உருவாகியுள்ளது. இச்சூழலில் தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களி டையே உரையாற்றிய பாக்., பிரதமர் ஷெபாஸ் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக பள்ளிகளுக்கு 2 வாரங்கள் விடுமுறை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அதி காரிகளுக்கான பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளன. வங்கி யைத் தவிர அரசு அலுவலகங்கள் அனை த்தும் வாரத்தில் 4 நாள்கள் மட்டும், 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க உத்தர விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
