ஈரானைத் தாக்கும் அமெரிக்காவைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல், மார்ச் 10- ஈரான்,லெபனான் மீது ராணுவத் தாக்குதலை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாயன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பி.செல்வராஜ், வடமதுரை ஒன்றியச்செயலாளர் மலைச் சாமி, சி.குணசேகரன், எம்.கே.சம்சுதீன், உள்ளிட்டோர் பேசினர்.
