tamilnadu

img

மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,மேயர் திறந்து வைத்தனர்

மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது சுகாதார வளாகம், அங்கன்வாடி கட்டிடங்களை ஆர்.சச்சிதானந்தம் எம்.பி,மேயர் திறந்து வைத்தனர்

திண்டுக்கல், மார்ச் 10-     திண்டுக்கல்லில் மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள ஆர்.சச்சிதானந்தம், எம்.பி, மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா ஆகியோர் திறந்து வைத்தனர்.  திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதி 35 ஆவது வார்டில் அண்ணா காலனி யில் ரூ.15 லட்சம் மதிப்பிலான மகளிர் சுகாதார வளாகம், 11 ஆவது வார்டில் ரூ.17 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஞாயிறன்று திறந்து வைத்தனர்.  சிபிஎம் மாவட்டச்செயலாளர் கே.பிரபாகரன். மாநகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, ஒன்றியச்செய லாளர் ஆர்.சரத்குமார், சிபிஎம் மாமன்ற உறுப்பினர்கள் கே.எஸ். கணேசன், ஜோதிபாசு, மாரியம் மாள், திமுக கிழக்கு மண்டலத் தலை வர் ஜான்பீட்டர், சிபிஎம் மாநகரக்குழு உறுப்பினர் என்.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.