திருப்பதிக்கே மொட்டை போட்ட ‘போலி பாபா’ ரூ.250 கோடி நெய் ஊழல்: பாஜக கூட்டணி - பவன் கல்யாண் கள்ள மவுனம்
திருப்பதி தென்னிந்தியாவின் புனிதத் தலங்களில் ஒன்றான திருப்பதி திருமலை தேவஸ்தானம் (TTD), கோடிக்க ணக்கான பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் மையப் புள்ளியாகும். அத்தகைய புனிதத் தின் இதயத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக (2019–2024) ரூ.250 கோடி மதிப்பிலான மிக மோசமான உணவுத் தரக் கலப்படம் மற்றும் நிதி மோசடி அரங்கேறியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் முக் கியப் பிரசாதமான லட்டுவுக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் நடந்த இந்த மிகப்பெரும் துரோகத்தை, சிபிஐ தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) இப்போது முழுமையாக அம்பலப்படுத்தியுள் ளது. இந்த ஊழல், வெறும் நிதி மோசடி மட்டுமல்ல, இது நிர்வாகச் சீர்கேடு, திட்டமிட்ட கார்ப்பரேட் கிரி மினல் சதி மற்றும் பாஜக கூட்டணி யின் பாசாங்குத்தனம் ஆகியவற் றின் முழுமையான வெளிப்பாடா கும். நம்பிக்கையின் மீது நடந்த மிகப்பெரும் துரோகம் இந்த ஊழலின் மையமாக உத்த ரகண்ட் மாநிலம் பகவான்பூரில் உள்ள போலே பாபா ஆர்கானிக் டெய்ரி என்ற நிறுவனம் (பொமில் ஜெயன் மற்றும் விபின் ஜெயன் நடத்தி வந்தது) அமைந்துள்ளது. எஸ்ஐடி விசாரணையில், இந்நிறு வனம் ஐந்து ஆண்டுகளில் 68 லட்சம் கிலோ (6,800 டன்கள்) போலி நெய் யைத் திருப்பதி தேவஸ்தானத் திற்கு வழங்கியுள்ளது உறுதி செய் யப்பட்டுள்ளது. எஸ்ஐடி குற்றவியல் அறிக்கை யின்படி, இந்தச் சதி திட்டமிட்ட கிரி மினல் செயல் என்பதை நிரூபிக்கும் வகையில், போலே பாபா டெய்ரி நிறுவனம் அதிர்ச்சியூட்டும் உண் மையைக் கொண்டிருந்தது. 2019 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில், இந்நிறுவனம் ஒரு லிட்டர் பாலையோ அல்லது ஒரு கிலோ வெண்ணெய்யையோ கூட கொள்முதல் செய்யவில்லை. உண்மையான நெய் உற்பத்திக்குத் தேவையான அடிப்படைக் கட்ட மைப்புகள் எதுவும் இல்லாத நிலை யில், இந்நிறுவனம், மலிவான பாமாயில், விலங்குக் கொழுப்பு கள், பனை கர்னல் எண்ணெய் போன்றவற்றை அடிப்படை மூலப் பொருட்களாகப் பயன்படுத்தியுள் ளது. நெய்யின் தோற்றம் மற்றும் மணத்தை உண்டாக்க, மோனோ - டி கிளிசரைடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் தொழில்முறை ரசா யனக் கலவைகள் மற்றும் செயற்கை எசென்ஸ்களையும் பயன்படுத்தி, பக்தர்களுக்கான லட்டுவில் கலக்க வழங்கியுள்ளது. நிர்வாகச் சீர்கேடும் கார்ப்பரேட் கள்ளக் கூட்டணியும் போலே பாபா டெய்ரி நிறு வனத்தின் துணிச்சலும், அதை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கையாண்ட விதமும் கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. தரக்குறைவு காரணமாக 2022-ஆம் ஆண்டிலேயே போலே பாபா டெய்ரி நிறுவனம் கருப்புப் பட்டி யலில் சேர்க்கப்பட்டது. அதன் பின் னரும், உரிமையாளர்கள் தங்கள் சட்டவிரோதச் செயலை நிறுத்த வில்லை. அவர்கள் ஆந்திராவின் வைஷ்ணவி டெய்ரி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் போன்ற நிறுவனங்க ளைப் பினாமிகளாகப் பயன் படுத்தி, அதே போலி நெய்யைத் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கியுள்ளனர். தமிழ்நாட்டின் திண்டுக்கல்லை மையமாகக் கொண்ட ஏ.ஆர். டெய்ரி புட்ஸ் நிறுவனத்தின் பங்கு, ஊழலின் உச்சபட்ச இழி முகத்தைக் காட்டுகிறது. இந்த நிறு வனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜு இராஜசேகரன், தமிழகத்தின் வர்த்தகத் துறையில் ஆழமான தொடர்புகளைக் கொண்டவர். ஜூலை 2024 இல் திருப்பதி தேவஸ் தானத்தால் நிராகரிக்கப்பட்ட விலங்குக் கொழுப்பு கலந்த நெய் டேங்கர்கள், ஏ.ஆர். டெய்ரி ஆலைக்குத் திருப்பி அனுப்பப்படா மல், ஒரு கல் உடைக்கும் குவா ரிக்கு கொண்டு செல்லப்பட்டு, லேபிள்கள் மாற்றப்பட்டு, மறு சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத்தின் நிர்வாக லட்சணம் இவ்வளவு பெரிய மோசடி, ரூ.50 கோடி பரிமாற்றம் மற்றும் ஐந்து ஆண்டுகள் தடையின்றி இயங்குவதற்குப் பின்னால் உள்ள தொழில் மற்றும் அரசியல் பலம் விசாரிக்கப்பட வேண்டும். ஊழல் நடந்த ஐந்து ஆண்டு களும் உத்தரகண்ட் மாநிலம் தொடர்ந்து பாஜக ஆட்சியின் கீழ் இருந்தது. ஒரு சொட்டுப் பால் கூட வாங்காத ஒரு போலி நிறுவனம் ஐந்தாண்டுகளுக்குப் பின் கண்டு பிடிக்கப்படும் வரை இயங்க, மாநில அரசின் உணவுப் பாது காப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் கைகட்டி வேடிக்கை பார்த்தது நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது. பவன் கல்யாணின் இரட்டை வேடம் செப்டம்பர் 2024-இல் ‘மாட்டுக் கொழுப்பு’ வதந்தி கிளம்பிய போது, ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் தன்னைக் ‘கோபக்கார சனாதனி’யாக முன் நிறுத்தி, காவி உடையில் 11 நாள் பிராயச்சித்த தீட்சை எடுத்தார். ஆனால், நிரூ பிக்கப்பட்ட இந்த ரூ.250 கோடி ஊழல், அதுவும் தங்கள் கூட்டணிக் கட்சியான பாஜக ஆளும் மாநி லத்தில் இருந்து கிளம்பி, திருப்பதி லட்டுவில் கலந்து, திருப்பதிக்கே நாமம் போட்ட பின்னரும், அதே பவன் கல்யாண் மற்றும் கூட்டணித் தலைவர்களிடம் இருந்து முழு மையான மவுனம் வெளிப்படு கிறது. இது அப்பட்டமான கள்ள மவுனம். “விஸ்வ ஹிந்து பரிஷத்” (VHP) போன்ற இந்து அமைப்பு களும் இந்த நம்பிக்கை துரோகத் திற்கு எதிராகக் குரல் எழுப்ப வில்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்த கமுக்கமான கள்ள மவு னம் தெளிவாக உணர்த்துவது: இந்துத்துவா என்பது உண்மை யான பக்திக்கான ஆயுதமல்ல; அது அரசியல் தேவையின் அடிப் படையில் மட்டுமே பயன்படுத்தப் படும் ஒரு தேர்தல் கருவியாகும். குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்து ஜெயின்கள் என்பதாலும், குற்றச் சங்கிலி பாஜக ஆளும் மாநிலத்தில் வேரூன்றி இருப்பதாலும், ‘மத உணர்வுகளுக்குப் பாதுகாப்பு’ என்பது வசதியாக மறக்கப்படு கிறது. பாஜக ஆதரவு ஊடகங்க ளும் இதைப் பெரிதாக்கவில்லை.
