states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் அலோக் ஷர்மா

நாட்டில் ஜனநாயகம் ஆபத்தில் இல்லை. மாறாக பணயம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்றியம் தொடங்கி மாநிலங்கள் வரை பாஜக அரசுகள் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றிடமிருந்து அறத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தையும் எதிர்பார்க்க முடியாது.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

தில்லி கார் வெடிப்பில் பலியானவர்களில்   6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  6 பேரும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக இறந்தவர்கள் அனைவரும் குடும்பத்தின் ஒரே முக்கிய  வருவாய் ஆதாரம் ஆவர். அவர்களை நம்பி தான் குடும்பம் உள்ளது. இதற்கு யார் பதில் சொல்வது?

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வெறும் கணக்கெடுப்பு மட்டுமல்ல. சமத்துவமின்மையின் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கும், அதைக் கலைப்பதற்கான கோட்பாடுகளையும், அரசியலையும் வடிவமைப்பதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு ஒரு தேவையான படியாகும்.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து நாட்டின் எல்லைகளையும், மக்களையும் தொடர்ந்து காக்க தவறுகிறார். ஏன் அவ்வாறு நடக்கிறது? இந்தியாவிற்கு தேவை நல்ல உள்துறை அமைச்சர் தானே தவிர வெறுப்பை மட்டுமே பரப்பும் அமைச்சர் அல்ல. தில்லி சம்பவத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும்.