யூடியூபர் துருவ் ரதி
வீரம் என்றால் என்ன தெரியுமா? டிரம்பின் பெயரை சொல்லவில்லை. சீனாவின் பெயரை சொல்லவில்லை. துருக்கியின் பெயரை சொல்லவில்லை. இந்த 56 அங்குல மார்பளவு கொண்ட வீரரின் பெயர் என்ன தெரியுமா?
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
டிரம்ப் விட்ட அறைக்கு, நேருவை கோபித்துக் கொள்கிறார் மோடி. டொனால்டு டிரம்ப் நண்பரும் அல்ல, நம்பத்தகுந்தவரும் அல்ல என்ற உண்மையை சீக்கிரமே மோடி புரிந்து கொண்டால் நாட்டுக்கு நல்லது.
ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்
ஆபரேஷன் சிந்தூர் பற்றிய உரையில் நேருவின் பெயரை 14 முறை மோடி குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ஏழு நிமிடங்களுக்கு ஒருமுறை. 61 வருடங்களுக்கு முன் 1964 லேயே நேரு இறந்து விட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டதோ 2025 மே மாதம். நிகழ்காலத்தை பேசாமல், கடந்த காலத்தை தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
ஊடகவியலாளர் சுஷாந்த் சிங்
எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படவில்லை. புதிய தகவல்கள் எதுவும் பகிரப்படவில்லை. பேசிய பழைய விசயமே பேசப்பட்டுள்ளது. உள்ளடக்கமே இல்லாத ‘உள்ளடக்கம்’.