states

img

23 ஆயிரம் பெண்கள் மாயம்! சுதந்திரமாகச் சுற்றும் பாலியல் குற்றவாளிகள்!!

23 ஆயிரம்  பெண்கள் மாயம்!  சுதந்திரமாகச் சுற்றும் பாலியல் குற்றவாளிகள்!! 

ம.பி, பாஜக அரசு ஒப்புதல்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 23,000 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் மாயமாகியுள்ள தாகவும், பாலியல் குற்றங்களில் தொ டர்புடைய 1,500க்கும் மேற்பட்ட குற்ற வாளிகள் இன்னும் கைது செய்யப் படாமல் சுதந்திரமாக சுற்றித் திரிவதை யும்  பாஜக அரசு ஒப்புக் கொண்டுள் ளது. ‘2024 ஜனவரி 1 முதல் 2025 ஜூன் 30 வரை, மாவட்டம் வாரியாக காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளின் நிலை, கைது செய்யப்பட்ட மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளி களின் விவரங்கள் குறித்து விரிவான விளக்கமும், கடமை தவறிய அதி காரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன’ என்றும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ கேள்வி எழுப்பி இருந்தார்.  இதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதில ளித்த பாஜக முதல்வர் மோகன் யாதவ், அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, 2025 ஜூன் 30 நிலவரப்படி, மாநிலம் முழுவதும் சுமார் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தம் 23,129 பேர் கடந்த ஓராண்டுக்கும் மேலாகக் காணாமல் போயுள்ளனர்.  அதே போல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 292 நபர்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 283 நபர்கள் என மொத்தம் 575 பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதுமட்டுமின்றி, பெண்கள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 443 நபர்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகளில் 167 நபர்கள் என 610 குற்றவாளிகள் சட்டத்தின் பிடியி லிருந்து தப்பி உள்ளனர் என தெரி வித்துள்ளார்.  அதாவது மத்தியப்பிரதேசம் முழு வதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான கொடூரக் குற்றங்களில் தொடர்பு டைய சுமார் 1,500க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதை பாஜக அரசே அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாஜக அரசின் பொ றுப்பற்ற தன்மை மற்றும் பெண்களுக்கு நிலவும் பாதுகாப்பின்மை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.