tamilnadu

img

அக்.8-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அமைச்சரவையில் அன்மையில் மாற்றம் செய்யப்பட்டது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பெறுப்பேற்றார். தமிழ்நாடு அமைச்சரவையில் கோவி.செழியன், ஆர்.ராஜேந்திரன், சா.மு.நாசர், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சர்களாக பதவியேற்றனர். 5 அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.