what-they-told

img

ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்: தொழில் அமைப்புகள் அதிர்ப்தி!

கோவை, பிப்.1- ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் எதிர்பார்த்த ஏதுமில்லை எனவும், ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் என தொழில் அமைப்புகள் அதிர்ப்தியை வெளிப்படுத்தி யுள்ளன. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழனன்று 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக் கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்,  தொழிற்துறையினர் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர். ஆனால், அது எதுவும் இல்லாமல்  வழக்கம் போல கார்ப்ரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தும், சிறுகுறு தொழில்களுக்கு கிள்ளிக் கூட கொடுக்காத பட்ஜெட்டாக உள்ளதாக தொழில் துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.   இதுகுறித்து, கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- சிறு-குறு தொழில் துறை மீது விதிக்கப்பட்ட அளவு கடந்த ஜி.எஸ்.டி. வரியால் கடந்த 7 ஆண்டுகளாக வேலை வாய்ப்பு மற்றும் முன்னேற்றம் தொழில் நகரான கோவை மாவட் டத்தில் வெகுவாக குறைந்துவிட்டது. உலகி லேயே வறுமை மிக்க நாடான சோமாலியா மக்க ளின் வாழ்க்கை தர நிலைக்கு கோவை குறுந் தொழில் முனைவோர்கள் அவர்தம் குடும்பத்தி னர் தள்ளப்பட்டுள்ளனர்.  ஒன்றிய அரசின் மோசமான வரி சீர் திருத்தத் தால் கோவையில் குறுந்தொழில்கள் அழியும் நிலைக்கு தள்ளப்படுவதை எதிர்த்து எங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை என்பது எங்களின் மிகப்பெரிய வேதனை மட்டு மல்ல சோகமான 5 ஆண்டு கால வரலாற்று செய் தியும் கூட, ஜி.எஸ்.டி. வரிக்கு முன்பு குறுந்தொழில் களுக்கு அளிக்கப்பபட்ட வரிச்சலுகைகளே தற் போதும் தொடர வேண்டும் என்பது குறுந்தொ ழில் முனைவோர்களின் தொடர் கோரிக்கையா கும். ஒன்றிய பாஜக அரசின் தற்போதைய வரி கொள்கையின்படி ரூ. 50 கோடியாவது முதலீடு செய்து தொழில் தொடங்குபவர்கள் தான் குறுந் தொழில் முனைவோர் என்ற நிலை ஏற்பட்டுள் ளது. ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் முதலீடு செய்து  குறுந்தொழில் தொடங்குவது இப்போது பெருங் கனவாகிபோனது. பாரதப் பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் குறுந்தொழில் தொடங்கு வது என்பது முற்றிலும் செயலிழந்துவிட்டது. இடைக்கால பட்ஜெட்டில் மூலப்பொருட்கள் கடும் விலையேற்றத்தை குறைப்பது தொடர் பான எந்தவொரு அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதேபோன்று, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) வெளியிட்டுள்ள  அறிக்கையில், MSME துறை வளர்ச்சி பெறும்  வகையில் வங்கி வட்டி விகிதம், பரிவர்த்தனை  கட்டண குறைப்பு இல்லாதது மூலப் பொருட் கள் விலை குறைப்பதற்கான அறிவிப்புகள் மற் றும் நாடு முழுவதும் ஒரே விலையில் மூலப் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்தல் ஆகிய  துறை ரீதியான எவ்வித அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிப்பதாக அதிருப்தி தெரிவித்துள் ளது. 2024- 2025  இடைக்கால பட்ஜெட் குறு சிறு தொழில்களுக்கு எவ்விதமான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஜிஎஸ்டி 5% யாக குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வங்கி  கடன் குறு சிறு தொழில்களுக்கு 5% சதவிதத்தில் வட்டி குறைப்பு சார்ப்பாஸ் சட்டத்தின் மேல் நடவ டிக்கை எடுக்க 6 மாத காலம் நீட்டிப்பு உட்படட எவ் விதமான எதிர் பார்ப்பும் அறிவிப்பில் இல்லாதது  ஏமாற்றம் அளிப்பதாக, தமிழ்நாடு கைத்தொழில்  மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங் கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

ஈரோடு

விசைத்தறிகளை மேம்படுத்த பட்ஜெட்டில்  அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தோம். இடைக்கால பட்ஜெட் என்பதால் வராது என் கின்றனர். ஏமாற்றமளிப்பதாகவே இந்த பட்ஜெட் உள்ளதாக விசைத்தறியாளர்களும், பத்து ஆண்டுகளில்  30 கோடி பெண்களுக்கு தொழில் கடன் வழங்கி அவர்களை  கோடீஸ்வரர்களாக ஆக்கியுள்ளோம் என்று பொய் சொல்லும் பட் ஜெட். ஆண்டுக்கு 2கோடி இளைஞர்களுக்கு நேரடி வேலை தருவதாக சொல்லி விட்டு அதைப் பற்றி அறிவிப்பு இல்லை. மாறாக திறன் மேம் பாட்டு பயிற்சி தந்துள்ளோம் என சுயதம் பட்டம் அடிக்கும் பட்ஜெட் எனவும், மத்திய  அரசின் இடைக்கால பட்ஜெட். ஏமாற்றம் தரும்  ஒன்று. துறைமுகங்கள், விமான நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து விட்டு, பின் அவை கள் நன்றாக இயங்க பொது வழித் தடங்கள் அரசு செலவில் என்பது நியாயம் அல்ல. ஆட்சிக்கு வந்த உடன் இந்த அரசு அளித்த வாக்குறுதிகள் பெட்ரோல் விலை குறைப்பு, ரயில்வே மூத்த குடிமக்கள் கட்டண சலுகை, 15 லட்சம் கொடுப் பதாக சொன்ன அறிவிப்புகள் கானல் நீர் போல் தெரிகிறது. வந்தே பாரத் ரயில் மூலம் கூடு தல் கட்டணம், இருப்பினும் கூட்டம் குறைவு என்ற நிலையில் 40 ஆயிரம் பெட்டிகளுக்கு வர்ணம் பூசி வசதியானவர்க்கு மட்டுமான அரசு  என்பது, இந்த அரசின் மீது அறிவார்ந்த மற்றும்  அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றம். சந்தை மூலம்  நடுவணரசு ரூ.11.75 லட்சம் கோடி கடன் பெறு வது மேலும் அரசு கூடுதல் கடன் வலையில் சிக்கவே உதவும் என ஈரோட்டில் பொதுமக்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாமக்கல்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் க.பழனியப்பன் கூறுகை யில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து  பழைய கொண்டு வருவது குறித்து அறிவிப்பு  வரும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நிதிநிலை  அறிக்கையில் இடம்பெறாதது மிகுந்து ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த ஆண்டு  நிதிநிலை அறிக்கையில் தனி நபர் வருமான உச்சவரம்பு உயர்த்தி அறிவிப்பார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில். தனிநபர் வருமான உச்ச வரம்பில் மாற்றம் இல்லை. பழைய நிலையே தொடரும் என்ற அறிவிப்பும் ஏமாற்றத்தை ஏற் படுத்தியுள்ளது. ஒட்டுமொத்தத்தில் அரசு ஊழி யர்கள் ஆசிரியர்களை ஏமாற்றி விட்ட மத்திய  அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையா கவே உள்ளது, என்றார்.