சேலம், ஜன.19- சேலம், பெத்தநாயக்கன் பாளையத்தில் திமுக இளை ஞரணி மாநில மாநாடு ஞாயி றன்று (நாளை) நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம், ஆத் தூர் அருகே உள்ள பெத்த நாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி 2 ஆவது மாநில மாநாடு ஞாயிறன்று (நாளை) நடைபெற உள் ளது. இந்நிலையில், நக ராட்சி நிர்வாகத்துறை அமைச் சர் கே.என்.நேரு மாநாட்டு திடலில் இறுதிக் கட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், மாநாட்டு பந்தலில் 1.25 லட்சம் பேர் அமரும் வகையில் நாற்காலிகள் போடப்பட உள்ளது. பந்தலின் உள்ளே 2.50 லட்சம் பேர், மாநாடு சுற்றியுள்ள இடங்களில் 2.50 லட்சம் பேர் என 5 லட்சம் பேர் பங்கேற்பதற்கு தேவை யான ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. மாநாட்டிற்கு தமிழ்நாட்டின் பல் வேறு பகுதியில் இருந்து வரும் வாகனங் கள் ஜிபிஎஸ் முறையில் ஒருங்கிணைக்கப் பட்டு அதற்கான பார்க்கிங் வசதி செய்யப் பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும், மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வரு மான மு.க.ஸ்டாலின் சனியன்று (இன்று) மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சேலம் வருகை தர உள்ளார். அங்கிருந்து மாநாட்டு பந்தலுக்கு வருகை தரும் முதல்வர் சென் னையில் இருந்து கொண்டுவரப்பட்ட சுடரை வாங்கி சுடரை ஏற்றி வைக்க உள்ளார். இதன் பின் நீட் தேர்வு ஒழிப்புக்காக நடைபெற்று வரும் இருசக்கர வாகன பேரணியையும் முதலமைச்சர் பார்வையிட உள்ளார். 1500 ட்ரோன்கள் பங்கேற்புடன் பிரம்மாண்ட ட்ரோன் ஷோ முதலமைச்சர் முன்னிலையில் நடக்க உள்ளது. இதையடுத்து ஞாயிறன்று (நாளை) காலை 9 மணி அளவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., கட் சிக்கொடியை ஏற்றி வைக்கிறார். மாநாட்டு பந்தலை மாணவர் அணி செயலாளர் எழிலர சன் திறந்து வைக்க உள்ளார். இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாநாட்டு தீர்மானங்களை முன் மொழிவதுடன், தீர்மானங்கள் குறித்து திமுக முன்னணி தலைவர்கள் பேச உள்ளனர். நாடா ளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த மாநாடாக சேலம் திமுக இளைஞரணி மாநாடு அமை யும். இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.